அதிபர் தர்மன், பிரதமர் லீ பாலஸ்தீன ஆணைய சகாக்களுக்கு இரங்கல் கடிதம்

அதிபர் தர்மன், பிரதமர் லீ பாலஸ்தீன ஆணைய சகாக்களுக்கு இரங்கல் கடிதம்

1 mins read
10b15b92-9ab3-4903-b3f6-e08152c86918
கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தைத் தூக்கிச்செல்லும் மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் தலைவர்கள் பாலஸ்தீன தேசிய ஆணைய சகாக்களுக்கு புதன்கிழமை அனுப்பிய இரங்கல் கடிதங்களில், காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இரு நாடுகளை அமைக்கும் தீர்வே, நீண்டகாலமாக நீடித்துவரும் இஸ்ரேலிய-பாலஸ்தீன பூசலுக்குத் தீர்வுகாண சாத்தியமான வழி எனும் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.

பாலஸ்தீன ஆணைய அதிபர் மஹ்முட் அபாஸுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனுப்பிய கடிதத்தில், காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடியும் உயிர்ச்சேதமும் குறித்து தாம் மிகுந்த கவலை கொள்வதாகக் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன ஆணைய பிரதமர் முகம்மது ஷ்டாய்யேவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் அனுப்பிய கடிதத்தில், காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதநேய நிலவரமும் பாலஸ்தீனக் குடிமக்கள் உயிரிழந்ததும் தம்மை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியதாகக் கூறினார்.

காஸாவில் நிலவரம் மோசமடைந்துள்ள வேளையில், மனிதாபிமான உதவிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் $300,000 பங்களித்துள்ளதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

பாலஸ்தீன ஆணைய வெளியுறவு அமைச்சர் ரியாட் அல் மாலிக்கிக்கு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில், காஸாவில் மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் அரசாங்கம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், சிங்கப்பூர் மக்கள், நிதி திரட்டி வருவதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்