குழந்தைகள் தினக் கொண்டாட்டம் 2023

குழந்தைகள் தினக் கொண்டாட்டம் 2023

1 mins read
5ed434e3-8edc-44a2-b9e5-e66318631576
படம்: - தாரகை இலக்கிய வட்டம்

தாரகை இலக்கிய வட்டம் எனும் லாபநோக்கமற்ற அமைப்பு, கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை தேசிய நூலக வாரியத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தவிருக்கிறது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா தினகரன். தொடக்க நிலை 5 மற்றும் 6 மாணவர்களுக்கான அரட்டை அரங்கத்துக்கு நடுவராக இருப்பவர் திருமதி இசக்கி செல்வி. மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பெரிதும் உதவுவது *படித்து மகிழவா?” “பண்பட்டு வாழவா?” என்பது பட்டிமன்றத் தலைப்பு.

“படித்து மகிழவே” என்ற தலைப்பை ஆதரித்து அமிழ்தினி உதயகுமார், வியாச பிரகன், கண்ணன் வர்ஷிகா ஆகிய மாணவர்கள் பேசுவார்கள். “பண்பட்டு வாழவே” எனும் தலைப்பை ஆதரித்து, பாலாஜி கனிஷ்கா, மகேஸ்வரன் நிதிஷ் சத்தியன், சனா கான் ஆகிய மாணவர்கள் பேசுவார்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்