பெர்ஜ் பல்க் என்ற உள்ளூர் கப்பல் நிறுவனம், தானியம், நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் ஒன்றை வெள்ளோட்டம் விட்டுள்ளது.
அந்தக் கப்பலில் நான்கு உலோக பாய்மரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவை காற்று திசைக்கு ஏற்ப கப்பலை இயக்கிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தவை.
அதன் மூலம் கப்பலின் எரி பொருள் செலவு மிச்சமாகும். காற்றில் கலக்கும் கரிமக் கழிவும் குறையும்.
பெர்ஜ் ஒலிம்பஸ் என்ற அந்தக் கப்பல் 210,000 டன் சரக்கை ஏற்றிச் செல்லக் கூடியது.
அதை வேல் என்ற சுரங்க நிறுவனம் வாடகைக்கு அமர்த்தி சீனாவில் இருந்து பிரேசிலுக்கு அனுப்பியது.
வழியில் அது முதன்முதலாக சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை கரை அணைந்தது.
அந்தக் கப்பலின் பாய்மரங்களுக்கு ‘காற்று இறக்கைகள்’ என்று பெயர். அவற்றை பிரிட்டனின் பார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் வடிவமைத்தது.
நார்வேயில் யாரா மெரைன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் அவற்றை உருவாக்கியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த உலோகப் பாய்மரங்கள் 37.5 மீட்டர் உயரமானவை. 20 மீட்டர் அகலமானவை.
அதன் மூலம் உலகின் ஆகஅதிக சக்தி வாய்ந்த சரக்குக் கப்பலாக அது திகழ்கிறது என்று பெர்ஜ் பல்க் நிறுவனத்தை நிறுவியவரும் அதன் தலைமை நிர்வாகியுமான ஜேம்ஸ் மார்ஷல் தெரிவித்தார்.

