சிங்கப்பூர் நன்கொடைமையமாக மாற வாய்ப்பு

சிங்கப்பூர் நன்கொடைமையமாக மாற வாய்ப்பு

1 mins read
9b3df824-a104-4c1e-965c-1eb4d7335e4a
நன்கொடைகளுக்கு சிங்கப்பூர் உகந்த சூழ்நிலையைக் கொண்டுள்ளது என்று அறப்பணி அமைப்புகள் கூறியுள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு முக்கிய நிதி நிலையமாக உள்ள சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவின் நன்கொடை மையமாகவும் மாற வாய்ப்புள்ளது என்று இவ்வட்டார சமூக முதலீட்டாளர்களின் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏவிபிஎன் என்பது அந்தக் கட்டமைப்பின் பெயர். அது, சமூக, சுற்றுச் சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக 11 மில்லியன் யுஎஸ் டாலரை திரட்டியுள்ளது. குடும்ப அலுவலகங்கள், அறநிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைமை நிர்வாகியான நைனா சுபர்வால் பத்ரா, ஆசியாவில் போதுமான உதவி கிடைக்காத மக்களுக்கும் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளுக்கும் ஆதரவளிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று கூறினார்.

அந்த வகையில் நிதியுதவிக்கு நன்கொடைகளைத் திரட்ட முடியும் என்று குறிப்பிட்ட நைனா, உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிதி நிலையமாக உள்ள சிங்கப்பூர் இத்தகைய மூலதன வரவுகளை எளிதாக்குவதில் முக்கிய பங்காற்ற முடியும் என்றார்.

அது மட்டுமல்லாமல் வரி மற்றும் சட்ட ஆலோசகர்கள், தொழில்நுட்பத் தளங்களை உருவாக்குவோர் போன்ற துணைச் சேவைகளை வழங்கும் நிபுணர்கள் உள்ளனர். சிங்கப்பூர் அரசாங்கம், சிறந்த திறனாளர்களை உருவாக்கி வருகிறது. நன்கொடையை ஊக்குவிக்க பல்வேறு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று நைனா மேலும் தெரிவித்தார்.

‘தி ராக்ஃபெல்லர்’ அறக்கட்டளையின் ஆசிய வட்டார அலுவலகத்தின் உதவித் தலைவரான தீபாலி கன்னாவும் ஆசிய நன்கொடையாளர் வட்டம், ஆசிய நன்கொடை கூட்டணி போன்ற அமைப்புகள் இங்கு துடிப்பான சூழலை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்