வீட்டிலேயே டிஐஒய் அழகு சிகிச்சை: ஆணையம் எச்சரிக்கை

1 mins read
4dffb104-f234-45a7-aaad-7f45dd2fef39
டாக்டர் பெக் சோங் ஹான் என்ற மருத்துவர் (நடுவில்) போலரிஸ் பிளாஸ்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி என்ற மருந்தகத்தில் ஒருவருக்கு ஒரு சிகிச்சை நடைமுறையைச் செய்து காட்டினார். - படம்; எஸ்டி

சிலர், தங்கள் தோல் தோற்றத்திற்கு மெருகூட்டுவதற்காக டிஐஒய் அழகு ஊசி சாதனங்களை, அவை மலிவானவை என்பதற்காக வீடுகளில் சொந்தமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அப்படி செய்யவேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் பொது மக்களை எச்சரித்துள்ளது.

மருந்தகத்தில் அழகு சிகிச்சையைச் செய்து கொள்வதற்கு ஆகும் செலவைவிட வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய அத்தகை ஒப்பனைக்குச் செலவு குறைவு.

அவை நிபுணத்துவ ஒப்பனை சிகிச்சையைப் போன்றவை என்றும் ஆனால் செலவு குறைவு என்றும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் அவற்றில் ஆபத்தான அங்கீகரிக்கப்படாத பொருள்கள் கலந்து இருக்கக்கூடும். அதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடுமையான தொற்றுகள், இரத்தக் குழாய் அடைபட்டு திசுக்கள் மடிவது, குருட்டுத்தன்மை, வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

அத்தகைய டிஐஒய் அழகு சாதனங்களின் பாதுகாப்பு, தரம், ஆற்றல் ஆகியவற்றை ஆணையம் இன்னமும் மதிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்