தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$2.8 பில்லியன் விவகாரம்: பெயர்களை அகற்றும் சிங்கப்பூரர்கள்

1 mins read
0b9c89c6-a717-4373-a38f-f5b02798248e
சிங்கப்பூர் அதிகாரிகள் அம்பலப்படுத்திய $2.8 பில்லியன் கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்பு உள்ளவர்கள் நிறுவனங்களை அமைக்க உதவிய பல சிங்கப்பூரர்கள், அந்த நிறுவனங்களில் இருந்து தங்கள் பெயர்களை அகற்றத் தொடங்கி இருக்கிறார்கள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர் அதிகாரிகள் அம்பலப்படுத்திய $2.8 பில்லியன் கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்பு உள்ளவர்கள், நிறுவனங்களை அமைக்க உதவிய பல சிங்கப்பூரர்கள், அந்த நிறுவனங்களில் இருந்து தங்கள் பெயர்களை அகற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

கணக்குப் பதிவு, நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் புலன்விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் பெயர்களை அகற்றுகிறார்கள்.

வர்த்தக விவகாரத்துறை அதிகாரிகள், ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தக் கள்ளப்பண விவகாரம் தொடர்பில் வெளிநாட்டினர் 10 பேரைக் கைதுசெய்தனர். அவர்களில் ஒன்பது பேர் ஆண்கள். ஒருவர் மாது. அவர்களில் பலரும் பல நிறுவனங்களை அமைத்தனர்.

பல சிங்கப்பூரர்கள், அந்த நிறுவனங்களின் இயக்குநர்களாக, செயலாளர்களாக, அல்லது பங்குதாரர்களாகப் பட்டியலிடப்பட்டு இருந்தனர்.

கைதானவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஏற்படுத்திய நிறுவனங்களிலும் அந்தச் சிங்கப்பூரர்களின் பெயர்கள் இருந்தன.

குறிப்புச் சொற்கள்