தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் வெள்ளியின் மதிப்பு ரிங்கிட்டுக்கு எதிராகக் கூடியது

1 mins read
feba475b-e80a-4e4a-8c2c-cc94f1eb2502
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மலேசிய ரிங்கிட்டுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை ஒரு வெள்ளியின் மதிப்பு 3.48 ரிங்கிட்டாக இருந்தது.

மலேசியாவின் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தது போன்றவை ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர்வுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் ஏற்றுமதியில் அதிக பங்கு வகிப்பது சீனா தான். ஆனால் தற்போது சீனாவில் பொருளியல் மந்தநிலை நிலவுவதால் மலேசியாவின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் தொடர்ந்து ஏழு மாதங்களாக ரிங்கிட்டின் மதிப்பு சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் மலேசியா, சிங்கப்பூர் நாணய வாரியங்கள் நெறிமுறைகளை மாற்றி அமைத்ததாலும் ரிங்கிட்டின் மதிப்பு பாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்