பொருள்களைப்போல பணிப்பெண்களை விளம்பரப்படுத்தும் முகவைகள்

சிங்கப்பூரில் இயங்கிவரும் சில இல்லப் பணிப்பெண் முகவைகள், பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் பணிப்பெண் சேவைகளை வாடிக்கையாளர்களிடம் விளம்பரப்படுத்துவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

புக்கிட் தீமா கடைத்தொகுதியில் செயல்படும் ஏறக்குறைய 40 பணிப்பெண் முகவைகள், அத்தகைய முறையில் பணிப்பெண்களை விளம்பரப்படுத்தி வருகின்றன.

அக்கடைத்தொகுதிக்குப் பக்கத்தில் உள்ள பியூட்டி வொர்ல்ட் பிளாசாவில் செயல்படும் ‘ஹோப் ரிக்ரூட்மண்ட்’ பணிப்பெண் முகவை, மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்கள் “விலைக் கட்டுப்படியானவர்கள், எளிமையானவர்கள்” என்று விளம்பரப்படுத்துகிறது. வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தோர் “விலைக் கட்டுப்படியானவர்கள்” என்று அந்த முகவை அதன் விளம்பரத்தில் குறிப்பிடுகிறது.

இந்நிலையில், அப்பணிப்பெண் முகவையைச் சேர்ந்த திரு டான் என்பவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். தம் முகவையின் விளம்பரங்கள் அவமதிப்பு காட்டுவதை ஒப்புக்கொண்டார்.

“ஜனவரியில்தான் நாங்கள் ‘ஹோப் ரிக்ரூட்மண்ட்’ முகவைக்கு உரிமையாளரானோம். முந்திய உரிமையாளரின் விளம்பர உத்திகளை நாங்கள் அறியவில்லை. அத்தகைய விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன,” என்று அவர் விளக்கமளித்தார்.

புக்கிட் தீமா கடைத்தொகுதியில் இயங்கிவரும் ‘ஜாய் எம்பிளாய்மண்ட் சர்வீசஸ்’ முகவையைச் சேர்ந்த விற்பனை நிர்வாகி மிஷல் போனகுவா, 40, மற்ற முகவையின் விளம்பரங்கள் கடந்த காலத்தில் இன்னும் மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

“இத்துறையில் நான் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அப்போது பணிப்பெண்கள் பொருள்களைப்போல நடத்தப்பட்டனர்,” என்றார் பிலிப்பீன்சைச் சேர்ந்த அவர். அவரது முகவையில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

பொருள்களைப்போல பணிப்பெண்களை முகவைகள் விளம்பரப்படுத்தியதைத் தொடர்ந்து, 2014ல் மனிதவள அமைச்சு ஆலோசனைக் கடிதம் ஒன்றை வெளியிட்டது.

பணிப்பெண் விளம்பரங்களில் கட்டணங்களைக் குறிப்பிடவோ பொருள்களைப்போல பணிப்பெண்களை நடத்தவோ கூடாது என்று அமைச்சின் தற்போதைய வழிகாட்டி நடைமுறைகள் கூறுகின்றன.

அதோடு, பணிப்பெண்களின் பண்புநலன்கள் குறித்தும் முகவைகள் விளம்பரப்படுத்தக்கூடாது என்று அமைச்சு சொன்னது.

பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வகையில் பணிப்பெண் சேவைகளை விளம்பரப்படுத்தும் முகவைகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எச்சரித்தார்.

பணிப்பெண்களின் கண்ணியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இடம்பெறும் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் அவர்.

பணிப்பெண்களை அவர்களின் முதலாளிகளைப்போல கருத வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!