சென்ற ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன படகோட்டியின் உடல் செந்தோசா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்கம் கேட்டபோது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் செந்தோசா தீவு கடற்பகுதியிலிருந்து ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் மீட்கப்பட்டது என்று காவல்துறை கூறியது.
அது, காணாமல்போன 33 வயது பெண் படகோட்டியின் உடல் என்பது பின்னர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண் படகோட்டி மற்ற மூவருடன் துடுப்புப் படகை செலுத்திக்கொண்டிருந்தபோது காணாமல்போனார்.
அவரது மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.