துவாசில் லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 25.
லாரியை ஓட்டி வந்த 46 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், கவனக்குறைவாக லாரியை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை 7.45 மணி அளவில் துவாஸ் வியூ லிங்க், துவாஸ் வியூ வாக் 2 சந்திப்பில் அந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அவரது தலைக்கவசமும் பெட்டியும் அருகருகே சாலையில் கிடந்தன.
புதன்கிழமை காலை 7.50 மணிக்கு டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில் லாரி ஒன்று நடுரோட்டில் இருப்பதைக் காண முடிந்தது. குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் வாகனம் அதன் அருகில் இருந்தது.
உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டியின் உடல் வெள்ளைநிற துணி போட்டு மூடப்பட்டிருந்தது. ஊழியர்கள் பலர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.