ஆந்தை திரைப்படப் பாடல் வெளியீடு

1 mins read
79590776-b469-4772-96c2-c6794e9ef99a
ஆந்தை சைக்கோ - படம்: மில்லத் அகமது.

சிங்கப்பூர்: ஆந்தை திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘மனிதம் உறங்கிட, மிருகம் விழித்திட’ என்ற சைக்கோ பாடல் மற்றும் திரைப்பட முன்னோட்டக் காட்சி ஆகியவற்றை அக்டோபர் 22ஆம் தேதி ஷாபாஸ் மெகா இந்தியா எக்ஸ்போவில் அதிகாரபூர்வமாக சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் ஷாநவாஸ் வெளியிட்டார்.

இப்பாடலை எழுதி, இயக்கியவர் மில்லத் அகமது. இசையமைத்துப் பாடியவர் எஸ். ஆர். ராம். ஆந்தை திரைப்படம் டிசம்பரில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குநர் நவீன் மணி தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்