டெலிகிராம் ஊடகம் வழி வெளிப்படையான பாலியல் காணொளிகள்

டெலிகிராம் ஊடகம் வழி வெளிப்படையான பாலியல் காணொளிகள்

1 mins read
124a3d4c-2eff-42f0-8ed2-fac7ec5d3f50
டெலிகிராம் ஊடகத்தில் பாலியல் காணொளிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. - படம்:டெலிகிராம்

டெலிகிராம் ஊடகத்தில் உறுப்பினர்கள் மட்டும் பார்க்கக்கூடியது எனக் கூறி ஒருமுறை கட்டணமாக $100 செலுத்துவோருக்கு சட்டவிரோத, வெளிப்படையான பாலியல் காணொளிகள் காட்டப்படுகிறது.

எஸ்ஜி நாசி லமாக் போன்று பலருக்கு தெரியும் வகையில் பாலியல் காணொளிகளை வெளியிடாமல் டெலிகிராம் ஊடகத்தில் செயல்படும் குழுக்கள் திரைமறைவில் செயல்பட கற்றுக்கொண்டுள்ளன.

எஸ்ஜி நாசி லமாக் ஒரு கட்டத்தில் 44,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. பின்னர் அது 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இழுத்து மூடப்பட்டது.

இதில் தாங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக இதில் அனுமதிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு உண்டு. அத்துடன், இது தொலைக்காட்சி ஒளிவழிகள் போல் செயல்படுகின்றன என்றும் இதில் உறுப்பினர்களாகச் சேர்பவர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் யார் எனத் தெரிய வழியில்லை.

இதற்கு கட்டணம் செலுத்திய பின்னரே அனுமதி வழங்கப்படும். அத்துடன், உறுப்பினர்களாக சேருவோருக்கு இணைய இணைப்பு வசதி வழங்கப்படும் அல்லது ஒளிவழியில் நேரடியாக சேர்க்கப்படுவர்.

சிங்கப்பூர் மாதர்கள் பாலியல் செயல்களில் ஈடுபடும் காணொளிகளைக் கொண்டிருக்கும் இந்த ஒளிவழிகள், இன வாரியாகப் பிரிக்கப்பட்டு ‘ரோஜாக் ஸ்டுடியோஸ்’, ‘எக்ஸ்எம்எம் இன்ஸ்டிடியூட்’ என்று பெயரிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஆறு ஒளிவழிகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டுபிடித்துள்ளது. இதுபோல் மேலும் பல ஒளிவழிகள் உள்ளன என்றும் நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்