‘டிரைவ்லா’ நிறுவனத்தில் கம்ஃபர்ட் டெல்குரோ $2.7 மி. முதலீடு

‘டிரைவ்லா’ நிறுவனத்தில் கம்ஃபர்ட் டெல்குரோ $2.7 மி. முதலீடு

1 mins read
dbcc2613-e776-4727-800e-83f17b8c9ac2
சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட கார் பகிர்வு நிறுவனமான டிரைவ் லா ஆஸ்திரேலியாவிலும் டிரைவ் மேட் என்ற பெயரில் செயல்படுகிறது. - படம்: லியான்ஹ சாவ்பாவ்

டிரைவ்லா எனும் வாடகைக் கார் நிறுவனத்தில் கம்ஃபர்ட்டெல்குரோ $2.7 மில்லியன் முதலீடு செய்கிறது. சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட இந்த கார்ப் பகிர்வு நிறுவனம் ஆஸ்திரேலியாவிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

கம்ஃபர்ட்டெல்குரோ முதலீட்டுடன் அந்நிறுவனத்துக்கு இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் கிடைத்துள்ள தொகை ஐந்து மில்லியன் வெள்ளி.

கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ‘டிரைவ் மேட்’ என்ற பெயரில் அந்நிறுவனம் ஆஸ்திரேலியாவில் செயல்படுகிறது.

‘டிரைவ் மேட்’ தளத்தில் ஏறக்குறைய 500 வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் சிட்னியில் தொடங்கி மெல்பர்ன் வரை வருகின்ற மாதங்களில் 3,000 கார்களை வாடகைச் சேவையில் ஈடுபடுத்த கம்ஃபர்ட்டெல்குரோ திட்டமிட்டுள்ளது.

இந்த வாகனங்கள் கம்ஃபர்ட்டெல்குரோவின் சொந்த வாகனங்களாக இருக்கும். இது, முதலீட்டில் அடங்காது. வாடகை வருமானத்தை கம்ஃபர்ட்டெல்குரோவும் டிரைவ் மேட் நிறுவனமும் பகிர்ந்துகொள்ளும்.

டிரைவ் லாவின் இணை நிறுவனரான கௌரவ் சிங்கால், புதிய கார்களின் விலை அதிகமாக இருப்பதால் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் பழைமையான கார்கள் இதில் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

டிரைவ் லாவின் வாகனங்கள் அதன் செயலி வழியாக சில மணி நேரம், நாள்தோறும், வாரந்தோறும் அல்லது நீண்டகாலத்திற்கு வாடகைக்கு விடப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்