அக்டோபர் மாதக் கவிமாலைச் சந்திப்பு தீபாவளிக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறவுள்ளது. சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. கவிமாலையின் 281வது சந்திப்பு எதிர்வரும் அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5 இமாஜினேஷன் அறையில் நடைபெறவிருக்கிறது. இம்மாதக் கவிமாலையின் சிறப்பு அங்கமாக கவிதை மன்றம் கவிஞர் இளங்கோ தலைமையில் நடைபெறவுள்ளது. ‘கவிஞர்களின் பார்வையில் தீபாவளிக் கொண்டாட்டம் மரபா? இல்லை நவீனமா?’ என்பதைத் தங்கள் கவிதை நடையில் படைக்கவிருக்கிறார்கள். நிகழ்ச்சியை கவிஞர் அஷ்ரஃப் நெறிப்படுத்த, படித்ததில் பிடித்தக் கவிதைகள் பகிர்வு, “ஒரு புத்த மதியம்” கவிதை நூலறிமுகம், “மழையின் மௌனம்” எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசிப்பு, விமர்சனம் மற்றும் பரிசளிப்பும் நடைபெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
கவிமாலைச் சந்திப்பு
1 mins read
படம்: - தமிழ் முரசு
குறிப்புச் சொற்கள்

