தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி மின்னஞ்சல்; வருவாய் ஆணையம் எச்சரிக்கை

1 mins read
7dc8f362-ac3b-4491-bded-0d7155dcb5f0
மோசடிக்காரர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஒரு கோரிக்கை இடம்பெற்று இருக்கும். விடிரான்ஸ்ஃபர் வழி சொத்து வரி விவரங்களைப் பார்க்கும்படி அந்தப் போலி மின்னஞ்சல்கள் கேட்டுக்கொள்ளும். - படம்: சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் 

உங்கள் சொத்து வரி விவரங்களை விடிரான்ஸ்ஃபர் என்ற தளம் வழி பார்க்கலாம் என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் இருந்து வருவது போல இணைய முகவரி ஒன்று உங்களுக்கு வந்தால் தயவு செய்து அதில் தொடர்புகொள்ள வேண்டாம் என்று அந்த ஆணையம் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி இருக்கிறது.

ஆணையத்தின் பெயரில் புதிய வகை மோசடி முயற்சி இடம்பெறுவதாக அது எச்சரித்து இருக்கிறது.

மோசடிப்பேர்வழிகள் இந்த ஆணையத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

விடிரான்ஸ்ஃபர் மூலம் பாதுகாப்பு இல்லாத மின்னஞ்சல் வழி யாருக்கும் தான் எந்தவோர் அறிவிப்பையும் அனுப்புவதில்லை என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

வரி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் அறிவிப்புகளும் mytax.iras.gov.sg. myTax Portal என்ற இந்த ஆணையத்தின் தகவல் களஞ்சியத்தில் இடம்பெற்று இருக்கும்.

அந்தக் களஞ்சியம் மிகவும் பாதுகாப்பானது. அது உங்களுக்கே உரிய ஒன்று. அதன்வழி நீங்கள் உங்களுடைய வரி விவரங்களைப் பார்த்து இந்த ஆணையத்துடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்