நொவினா எம்ஆர்டி நிலையத்தில் புகை

நொவினா எம்ஆர்டி நிலையத்தில் புகை

1 mins read
c2f0fd78-d5df-4e12-b0da-c2f19979aea9
புகை தென்பட்டதால் வெள்ளிக்கிழமை (அக். 27) மாலை நொவினா எம்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. - படம்: ஜோஹன் லோ

நொவினா எம்ஆர்டி நிலையத்தில் புகை தென்பட்டதால் வெள்ளிக்கிழமை (அக். 27) மாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனால் வடக்கு-தெற்கு வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் நொவினா எம்ஆர்டி நிலையத்தில் நிற்காது என ரயில் சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி அறிவித்தது.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து புகை வெளியேறியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்கில் 5.45 மணியளவில் பதிவேற்றப்பட்ட காணொளியில் நிலையத்தின் தாழ்வாரத்திலிருந்து புகை கிளம்புவதைக் காண முடிந்தது.

வெள்ளிக்கிழமை மாலை 5.49 மணிக்கு நிலையம் மூடப்பட்டதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்காக அது மன்னிப்புப் கேட்டுக்கொண்டது.

நியூட்டன், தோ பாயோ எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே பயணிகளுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீ அணைப்பு வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.

நொவினா நிலையத்தில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்த யாரும் பாதிக்கப்படவில்லை என்று எஸ்எம்ஆர்டி மேலும் தெரிவித்தது.

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நொவினா எம்ஆர்டி நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்