கொலை விவகாரம்; ஜோகூரில் இரு சிங்கப்பூரர்கள் கைது

1 mins read
4b936d3f-5146-48d7-b65d-da2fc8221ed3
காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும்போது கார் விபத்தில் சிக்கிக்கொண்டதை அடுத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். - ஜோகூர் பாரு தென் மாவட்ட காவல்துறை/ஃபேஸ்புக்
multi-img1 of 3

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் இருபது வயதுகளில் உள்ள ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் இரு சிங்கப்பூரர் உட்பட மூவரை ஜோகூர் காவல்துறை கைது செய்துள்ளது.

மூன்றாவது நபர் உள்ளூர்வாசி என நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் இருபது வயதுகளில் உள்ளவர்கள்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3.41 மணிக்கு கூர்மையான ஆயுதங்களுடன் சண்டை நடப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை சொன்னது.

“இறந்தவரின் மார்பு, வயிறு, தோல், பின்பக்கக்கத்தில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. விரல்களிலும் கன்னத்திலும் காயம் இருந்தது,” என்று ஜோகூர் காவல்துறை அறிக்கை தெரிவித்ததாக ‘த ஸ்டார்’ தகவல் வெளியிட்டிருந்தது.

தஞ்சுங் புத்தேரி அருகே காரில் மூன்று சந்தேக நபர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“சந்தேக நபர்களை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது காரில் இருந்தவர்கள் சந்தேகப்படும்படி நடந்துகொண்டனர். சோதனையிட்ட சமயத்தில் கார் திடீரென வேகமாக பறந்து சென்றது. ஆனால் சிறிது தூரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி நின்றது. உடனே மூவரையும் மடக்கி கைது செய்தோம்,” என்று ஜோகூர் காவல்துறை கூறியது.

காவல்துறை உயரதிகாரியான ஏசிபி ராவூபை ‘த ஸ்டார்’ தொடர்புகொண்டபோது இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்தார். மற்றொரு நபர் உள்ளூர்வாசியான ஒரு பெண்.

ஒரு சந்தேக நபர் மீது ஏற்கெனவே போதைப் பொருள் தொடர்பான குற்றவியல் பதிவு இருக்கிறது.

மூவரிடமிருந்து கத்தி, இரண்டு சட்டை, இரண்டு கால் சட்டை, மூன்று கைப்பேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்