பெட்ரோல் விலை ஏற்றம்: ஷெல், கால்டெக்ஸ் லிட்டருக்கு 5 காசு கூட்டுவதாக அறிவிப்பு

பெட்ரோல் விலை ஏற்றம்: ஷெல், கால்டெக்ஸ் லிட்டருக்கு 5 காசு கூட்டுவதாக அறிவிப்பு

1 mins read
9c9416b9-e264-4b2a-a836-137b26d2b6af
எஸோ, சைனோபெக், எஸ்பிசி ஆகிய நிறுவனங்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. - தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்: ஷெல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.20) காலை ஒரு லிட்டருக்கு 5 காசு என்ற விலை ஏற்றத்தை அறிவித்த பிறகு, பிற்பகலில் கால்டெக்ஸ் அதன் விலை ஏற்ற அறிப்பை வெளியிட்டது.

இரண்டு முழு வாரங்கள் எவ்வித ஏற்றத்தையும் செய்யாத மேற்குறித்த இரு நிறுவனங்களும் கடந்த வெள்ளிக்கிழமை தத்தம் விலைகளின் மாற்றங்களை அறிவித்தன.

இங்கு சேவை வழங்கும் இதர மூன்று நிறுவனங்களான எஸோ, சைனோபெக், எஸ்பிசி ஆகியன எந்த மாற்றமும் இல்லாமல், கடந்த அக்.6ல் வழங்கிய விலைகளையே தொடர்ந்து வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்