மோசடி, ஏமாற்று வழக்கு: சாட்சியமளித்த ஹின் லியோங் நிறுவனர் ஓகே லிம்

மோசடி, ஏமாற்று வழக்கு: சாட்சியமளித்த ஹின் லியோங் நிறுவனர் ஓகே லிம்

1 mins read
06f4e45b-e1d9-4d96-9c69-1994f1ddf4c7
கிட்டத்தட்ட 130 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஓகே லிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி, ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஹின் லியோங் டிரேடிங் நிறுவனர் லிம் ஊன் குயின் (ஓகே லிம்), தனது தற்காப்புத் தரப்பின் வழக்குக்காக சாட்சியமளிக்க நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். எண்ணெய்த் துறையில் தான் எவ்வாறு கால்பதித்து ஆள வந்தார் என்பது பற்றியும் அந்த ஆட்சிக் கவிழ்வதற்குமுன் தனது பங்கைப் பற்றியும் 81 வயது ஓகே லிம் பேசினார்.

எச்எஸ்பிசி வங்கியை ஏமாற்றியதாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் போலி ஆவணத்தைத் தயாரிக்க ஹின் லியோங் டிரேடிங்கின் ஒப்பந்த நிர்வாகியைத் தூண்டியதன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார். குற்றச்சாட்டுகளில் $111.7 மில்லியன் அமெரிக்க டாலர் (S$148.7 மி.) சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது குடும்பத் தொழில் பற்றி நீதிமன்றத்தில் பேசிய ஓகே லிம், ஒரு நிறுவனத்திற்கு நிதி தேவைப்பட்டால் மற்றொரு நிறுவனம் அதற்கான நிதியைத் தரும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்