மரினா பே சேண்ட்ஸ் நுழைவாயிலில் முகஞ்சுளிக்க வைத்த செயல்: காவல்துறை விசாரணை

1 mins read
c0940369-97e5-401a-a374-a5db509878ce
மரினா பே சேண்ட்ஸ் தரைத்தளத்தில் ஒருவர் மலம் கழிக்கும் காட்சி. - படம்: காக்கிஸ் கிளப்/ஃபேஸ்புக்

மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதியில் ஒருவர் மலம் கழித்தது அங்குள்ள கேமரா மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்துரைத்த மரினா பே சேண்ட்ஸ் பேச்சாளர் ஒருவர், இந்த விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும் இது பற்றி விசாரித்து வருகிறோம் என்றும் சொன்னார்.

மரினா பே சேண்ட்ஸ் நுழைவாயில் ஒன்றில் ஒருவர் தமது கால்சட்டையைக் கீழிறக்கி, மலம் கழித்தது தொடர்பான காணொளி திங்கட்கிழமை முதல் இணையத்தில் வலம் வருகிறது.

இந்தப் புகைப்படத்தை ‘காக்கிஸ் கிளப்’ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்