தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் கண்காட்சி

2 mins read
49aa5fca-0966-4f06-afe4-2e4038464138
ஐடிபி ஆசியா கண்காட்சியில் கலந்துகொண்டோர். - படம்: சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்
multi-img1 of 4

உலகளவில் இந்தியாவுக்கும் ஆசிய பசிபிக் பகுதிக்கும் சுற்றுப்பயணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய சுற்றுலா அமைச்சு, பல பங்குதாரர்களுடன் கைகோத்து சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக பயணக் கண்காட்சியில் அண்மையில் பங்கேற்றது.

‘ஐடிபி ஆசியா’ எனும் அக்கண்காட்சி அக்டோபர் 25 முதல் 27ஆம் தேதிவரை நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சு வழிநடத்திய கண்காட்சியில் உலகெங்கிலும் இருந்து, குறிப்பாக ஆசிய பசிபிக்கைச் சேர்ந்த பயணத்துறை நிறுவனங்களும் பங்குதாரர்களும் பங்கேற்றனர்.

‘இன்கிரேடிபல் இந்தியா!’ எனும் கருப்பொருள்கீழ் நடத்தப்பட்ட அக்கண்காட்சியில் இந்தியாவில் காத்திருக்கும் பயண அனுபவங்களைப் பற்றி அவர்கள் அறிந்தனர்.

கண்காட்சியில் அமைக்கப்பட்ட கூடத்தை சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பக் ஆம்புலே வருகையாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.

சுவாரசியமான அனுபவங்களை வழங்கும் இந்தியாவுக்கு செய்தியாளர்களும் பல துறைகளைச் சார்ந்தவர்களும் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக கண்காட்சி அமைந்தது.

இந்தியாவைச் சேர்ந்த பயணத்துறை நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் காட்சிப்படுத்தின. கோவா, லடாக், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரியின் அரசாங்க அமைப்பினரும் அவற்றுடன் இணைந்து கொண்டனர்.

மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க வேண்டும் என்ற இலக்கும் கண்காட்சியில் நிர்ணயிக்கப்பட்டது.

பெளத்த சுற்றுலாவுக்கு சிங்கப்பூரும் இதர தென்கிழக்காசிய நாடுகளும் இந்தியாவுக்கு முக்கியச் சந்தையாக விளங்குகின்றன.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒவ்வோரு வாரமும் கிட்டத்தட்ட 150 விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்திய சுற்றுலா அமைச்சு நீடித்த நிலைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா அதற்காக தேசிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘மிஷன் லைஃப்’ எனும் திட்டத்தின்கீழ் செயல்படும் ‘டிராவல் ஃபார் லைஃப்’ திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பருவநிலை செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சுற்றுப்பயணிகளுக்கும் பயணத்துறை நிறுவனங்களுக்கும் மாற்றங்களைக் கொண்டுசேர்க்கும்.

அந்தத் திட்டம், இந்தியாவின் ஜி20 உச்சநிலை மாநாட்டின் முக்கிய அம்சமான பசுமை சுற்றுலாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்