நாடு தழுவிய திட்டம் தொடங்கும் மத்திய சேமநிதிக் கழகம்

1 mins read
b5797d94-42f9-4c62-af51-5b4a548bc981
மத்திய சேமநிதிக் கழகம் தனது உறுப்பினர்களுக்குப் புதிய திட்டம் மூலம் பல நடவடிக்கைகளை நடத்த இருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓய்வுக்கால திட்டங்களைப் பற்றி யோசிப்பதை ஊக்குவிக்க நாடு தழுவிய திட்டத்தை மத்திய சேமநிதிக் கழகம் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்க இருக்கிறது.

ஓய்வுக்கால திட்டங்கள், நிதிநிலையை மேம்படுத்துவது பற்றி யோசிக்க 36 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட தனது உறுப்பினர்களை மத்திய சேமநிதிக் கழகம் ஊக்குவிக்கிறது.

குறுகிய கால லாபம், நட்டம் ஆகியவற்றைக் கடந்து யோசிக்குமாறு தி ஹார்ட்லேண்ட்ஸ் என்கேஜ்மண்ட் திட்டம் மூலம் தமது உறுப்பினர்களுக்கு மத்திய சேமநிதிக் கழகம் தெரிவிக்க விரும்புகிறது.

இந்தத் திட்டத்தை ஏற்று நடத்த ஏலக்குத்தகைக்கு மத்திய சேமநிதிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இத்திட்டம் மூலம் நாடெங்கும் முக்கிய குடியிருப்பு வட்டாரங்களில் ஏறத்தாழ 40,000 மத்திய சேமநிதி உறுப்பினர்களுக்காக பல நடவடிக்கைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட எதிர்கால, புதிய உறுப்பினர்களுக்கு திட்டங்கள் மூலம் நடவடிக்கைகள் நடத்தப்படும்.

ஓய்வுக்காலத்துக்குத் தேவையான பணத்தை ஒதுக்கிவைப்பதில் சிங்கப்பூரர்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக கடந்த ஆண்டிற்கான ஓசிபிசி நிதிநலக் குறியீடு மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதி