தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை இரவு தீ மூண்டதைத் தொடர்ந்து இருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
புளோக் 63 லோரோங் 5 தோ பாயோவில் உள்ள அந்த ஆறாவது மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரவு 9 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயணைப்பாளர்கள் வருவதற்குள் தீ மூண்ட அந்த வீட்டிலிருந்து நால்வர் வெளியேறிவிட்டனர்.
வீட்டின் வரவேற்பறையில் மின்னூட்டம் செய்யப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் மின்கலனில் தீ மூண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.