ஷரீஃபாவுக்கு பெரித்தா ஹரியான் இளம் சாதனையாளர் விருது

இவ்வாண்டுக்கான மலாய் மொழி நாளிதழ் பெரித்தா ஹரியானின் இளம் சாதனையாளர் விருதை வென்றார் ஷரீஃபா அமினா அப்துல் ஷெரீஃப், 22.

பாடகரும் பாடலாசிரியருமான ஷரீஃபா, இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

ஷரீஃபாவின் இசைப் பயணம் சிறு வயதிலேயே தொடங்கியது. தன் தாயார் தன்னுள் இசை ஆர்வத்தை விதைத்ததாகக் கூறிய ஷரீஃபா, இயல்பாகவே இசையால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் சொன்னார்.

யூடியூப் தளத்தில் பாடல் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வதில் தொடங்கி ஷரீஃபா பின்னர் ‘கிராஸ் ரேடியோ என்டர்டெயின்மண்ட்’ எனும் உள்ளூர் இசை நிறுவனத்தில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் சேர்ந்தார்.

நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்குவேரில் உள்ள விளம்பரப் பலகையில் அண்மையில் ஷரீஃபாவின் முகம் தோன்றியது.

மேலும், சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரதிநிதித்து, ஸ்போட்டிஃபை இசைத்தளத்தில் பெண்களுக்கு இசைத் துறையில் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதைப் பறைசாற்றும் இயக்கத்திலும் ஷரீஃபா பங்காற்றினார்.

நோரா ஜோன்ஸ், டோலி பார்டன் இருவரும் தனக்குப் பிடித்த பாடகர்கள் என்ற ஷரீஃபா, வெவ்வேறு பின்னணி, வயதுப் பிரிவுகளைக் கொண்ட மக்களைக் கவரும் வண்ணம் பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்.

சென்ற ஆண்டு இறுதியில் அவரது பாடலான ‘ரைட் பேர்சன் ராங் டைம்’ இதுவரையில் 1.4 மில்லியன் மக்களை எட்டியுள்ளது.

தற்போது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடர்புத்துறையில் இளநிலைப் பட்டம் பயின்று வரும் ஷரீஃபா, சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன்னர் தனது பாடல் ஒன்றில் தன் சகோதரனை இடம்பெறச் செய்துள்ள அவர், வருங்காலத்தில் தன் உறவினர்களையும் ஒன்றிணைத்து பாடல் ஒன்றை வெளியிடும் கனவுப்பயணத்தில் உள்ளார்.

இசைத்துறையை ஒரு முழு நேரப் பணியாக தேர்ந்தெடுப்பது சிங்கப்பூரில் வழக்கமில்லை என்றாலும், சிங்கப்பூரில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் இருக்கிறார் ஷரீஃபா.

“இளையர்கள் கனவு கண்டு, தங்களுக்குப் பிடித்த துறையில் சாதிக்கும் துடிப்புடன் இருக்க வேண்டும். மனத்தளவில் அவர்கள் விருப்பமுள்ள துறையில் இருந்தால்தான் அதில் சிறப்பாக விளங்க முடியும்,” என்றார் அவர்.

கடந்த 25 ஆண்டுகளாக பெரித்தா ஹரியான், மலாய் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் கல்வி, தொழில், கலை, கலாசாரம், சமூக சேவை போன்ற துறைகளில் புரியும் சாதனைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

இம்மாதம் மூன்றாம் தேதியன்று நடைபெற்ற விருது விழாவில் சாதனையாளர், இளம் சாதனையாளர் என இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் முன்மொழிந்து, அதன்பிறகு நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியனிடமிருந்து விருதைப் பெற்றுகொண்டனர்.

சிறப்புரையாற்றிய அமைச்சர், “இந்த விருது விழா நம் நாட்டில் இருக்கும் மலாய் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் எவ்வாறு முன்னேறியுள்ளார்கள் என்பதற்குச் சான்று.

“பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் போன்ற பதவிகளில் இருக்கும் மலாய், முஸ்லிம் சமுதாயத்தினரின் எண்ணிக்கை 40 விழுக்காடு உயர்ந்துள்ளது.

“மேலும், தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை நமக்குக் காட்டியுள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதுபோல நாம் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு பயனாளிகளுக்குக் கைகொடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

மற்றொரு பிரிவில் விருது பெற்ற திரு ஷரின் அப்துல் சலாம், 50, எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிர்வாக இயக்குநராகவும் நிறுவனத்தின் உத்திபூர்வ தொடர்புப் பிரிவிற்கான மூத்த துணை தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் உருவாக்கத்திற்கு கடுமையாக உழைத்த கிட்டத்தட்ட 1,200 ஊழியர்களை நிர்வகித்த அவர், ஆயர் ராஜா சமூக நிலைய மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!