புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் $10.5 பில்லியன் முதலீடு: செம்ப்கார்ப்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும் என்று செம்ப்கார்ப் இண்டஸ்டிரிஸ் அறிவித்துள்ளது.

தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கான வளர்ச்சி எதிர்காலத்தில் அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும் 2028ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்கவும் அது திட்டமிட்டுள்ளது.

இந்த 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு, 2024 முதல் 2028 வரையிலான மொத்த முதலீட்டில் 75 விழுக்காடாகும்.

எஞ்சிய முதலீட்டில் பத்து விழுக்காடு அதன் ஹைட்ரஜன் தொடர்பான சொத்திலும் பத்து விழுக்காடு கரிம வெளியேற்றம் அல்லாத தீர்வுகளுக்கும் ஐந்து விழுக்காடு அதன் ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற தீர்வுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

தற்போது செம்ப்கார்ப்பின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் ஆற்றல் 12 கிகாவாட்ஸ் ஆகும்.

2028ஆம் ஆண்டில் எரிசக்தி ஆற்றலை 25 கிகாவாட்சுக்கு அதிகரிப்பது செம்ப்கார்ப்பின் இலக்காகும்.

இதற்கிடையே இந்தக் குழுமம், 2025ஆம் ஆண்டில் மணிக்கு ஒரு மெகாவாட்டுக்கு 0.4 டன் கார்பன் டைஆக்சைடு என்ற இலக்கை அடைந்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதன் வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்காக எரி வாயுவை மாற்றத்திற்கான எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடரும் என்று செம்ப்கார்ப் கூறியது.

மேலும் குறைந்த கரிம எரிசக்தி, குறைந்த கரிம மூலப்பொருட்கள் மற்றும் கரிம மேலாண்மை ஆகியவற்றில் தனது நிலையை ஆதரிக்கும் ஆற்றல்களில் முதலீடு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!