தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
முதியோர் சாலையைக் கடக்க கூடுதல் நேரம்

2027க்குள் அனைத்துப் பேட்டைகளிலும் ‘பச்சை மனிதன்’ சமிக்ஞை வசதி

1 mins read
da3e9641-c1fd-432b-b679-ba0eb7cfa379
ஊட்ரம் சாலையில் பாதசாரிகள் சாலையைக் கடக்க உதவும் பச்சை மனித சமிக்ஞை. - படம்: எஸ்பிஎச்

முதியோர் சாலையைக் கடக்க கூடுதல் நேரம் வழங்கும் விதமாக சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து விளக்குகளில் தெரியும் பச்சை மனிதன் சமிக்ஞை அனைத்து குடியிருப்புப் பேட்டிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்தக் கூடுதல் நேர பச்சை மனிதன் சமிக்ஞை வசதி 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பேட்டைகளிலும் உள்ள பாதி சாலைப் போக்குவரத்து விளக்குப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை அமல்படுத்தும் நடவடிக்கை ஓராண்டு தாமதமான நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதுபற்றி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட நிலப் போக்குவரத்து ஆணையம், இந்தக் கூடுதல் நேர பச்சை மனிதன் சாலைக் கடப்பு வசதி படிப்படியாக மேலும் 1,500 சாலைச் சந்திப்புகளில் 2027ஆம் ஆண்டு நான்காம் காலாண்டுக்குள் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தது.

இதன்மூலம், கூடுதல் நேர பச்சை மனிதன் சாலை கடப்பு வசதி மொத்தம் 2,500 சாலை போக்குவரத்து விளக்குப் பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டிருக்கும் என்றும் ஆணையம் விளக்கியது.

முன்னதாக, இந்தத் திட்டம் 2026ஆம் ஆண்டில் நிறைவுறும் என்று ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன் தொடர்பில் ஆணையம் வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியின்படி, இந்தக் கூடுதல் நேரப் பச்சை மனிதன் வசதியை ஜாலான் சுல்தான், விக்டோரியா ஸ்திரீட் சாலைச் சந்திப்பு, அலெக்சாண்டிரா ரோடு, ஜாலான் புக்கிட் மேரா, குவீன்ஸ்வே சாலைச் சந்திப்பு ஆகியவற்றுடன் பாசிர் ரிஸ் சென்ட்ரலை ஒட்டிய சாலைச் சந்திப்பு ஆகிய இடங்கள் பெறும் என்று ஆணையம் விளக்கமளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்