புக்கிட் தீமா ஈரச் சந்தை 2024ன் மத்தியில் மூடப்படும்

அடுத்த ஆண்டு (2024) மத்தியில் தற்போதைய புக்கிட் தீமா ஈரச்சந்தையும் சமைத்த உணவுக் கடைத் தொகுதிகளும் மூடப்பட்டு, அதே இடத்தில் 2029 இறுதிக்குள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாக பல புதிய அம்சங்கள் இடம்பெறப்போகின்றன.

ஈரச்சந்தையில் செயல்படும் சுமார் 90க்கும் மேற்பட்ட (50 விழுக்காடு) கடைக்காரர்கள் ஜாலான் செ சுவான் சாலையில் உள்ள தற்காலிக இடத்துக்கு இடமாற்றம் செய்யப்போகின்றனர். தற்காலிக இடத்தில் 100 கடைகள் வரை செயல்படலாம்.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2019ம் ஆண்டு திட்ட வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி, புதிய புக்கிட் தீமா ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்று மக்கள் கழகம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது. புக்கிட் தீமா சமூக மன்றம், புதிய ஈரச் சந்தை, மளிகைக் கடைத் தொகுதி, அருகில் உள்ள பே ஹுவா பிரஸ்பட்டேரியன் தொடக்கப் பள்ளியின் உள்ளரங்கம் ஆகியவற்றுடன் பற்பல புதிய வசதிகள் அங்கு எழவிருக்கின்றது.

இந்த 29,000 சதுர மீட்டர் பரப்பளவு மேம்பாட்டை மக்கள் கழகம் மேற்பார்வை செய்யும். அங்கு கார் நிறுத்த 2 கீழ்தளங்களும் அடங்கும்.

ஒருங்கிணைந்த மேம்பாட்டின் கட்டமைப்புப் பாதுகாப்பை அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர்கள் உறுதிசெய்ய கடந்த அக்டோபரில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

புதிய மேம்பாட்டுத் திட்டத்தில், 87 ஈரச் சந்தைக் கடைகள், 82 சமைத்த உணவுக் கடைகள் இருக்கும். தற்போதைய இடத்தில் 95 ஈரச்சந்தைக் கடைகளும் 84 சமைத்த உணவுக் கடைகளும் உள்ளன. உணவு நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின்படி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மறுசீரமைப்புப் பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு, காற்றோட்ட வசதிக்காக கூரைகள் உயர்த்தப்பட்டன.

புதிய மேம்பாட்டுத் திட்டப்படி, மூத்தோர் பராமரிப்பு நிலையம், நாட்டிய பயிற்சி அறை, உடற்பயிற்சிக் கூடம், சமையல் திறன் பயிற்சி இடம் போன்றவை அடங்கும். தற்காலிக இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள கடைக்காரர்களுக்கு 2022 நடுப்பகுதி வரை கெடு கொடுக்கப்பட்டது.

இருப்பினும் தற்காலிக இடத்தில் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளதாக 2023 மார்ச் மாதத்தில் புக்கிட் தீமா குடியிருப்பாளர் ஆலோசனைக் குழுவின் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கொவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக புதிய ஒருங்கிணைந்த கட்டமைப்பின் வடிவமைப்பு உறுதி செய்யப்பட கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் இடமாற்றம் செய்யவும் கால தாமதம் ஏற்பட்டு தற்காலிக இடத்தில் செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளோருக்கு வாடகை பிரச்சினைகள் உருவெடுக்கும் என்று கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்காலிகச் சந்தையை ஐஎஸ்ஜி மார்கெட்பிளேஸ் என்ற தனியார் நிறுவனம் கட்டமைத்து நிர்வகிக்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!