ஏறக்குறைய $14 மில்லியன் மதுப்புடைய 1,700 மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 550க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சந்தேக நபர்களில் 372 பேர் ஆண்கள். 181 பேர் பெண்கள். அவர்களின் வயது 15 முதல் 76 வரையிலாகும்.
சந்தேகத்திற்கு இடமில்லாத பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி கணிசமான அளவு பணத்தை ஏமாற்றிய பல்வேறு மோசடித் திட்டங்கள் குறித்த விசாரணையில் அவர்கள் உதவி வருகின்றனர்.
வேலை வாய்ப்பு மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் இணையக் காதல் மோசடி ஆகியவை இவற்றில் அடங்கும்.
ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, அல்லது உரிமம் பெறாத கடன் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஏமாற்றுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.
கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் மோசடி செயல்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறையும் 500,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
உரிமம் இல்லாத கடன் வழங்கினால் 125,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
தீவு முழுவதும் நடைபெற்ற இரண்டு வாரச் சோதனை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 9ஆம் தேதி முடிவடைந்தது.
வர்த்தக விவகாரப் பிரிவு, ஏழு காவல் நிலையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மோடிகளை இலக்காகக் கொண்டு தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தனர்.
இந்த நிலையில் மக்கள் மோசடி சம்பவங்களில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை மீண்டும் வலியுறுத்தியது.
“உங்களுடைய வங்கிக் கணக்குகளை அல்லது கைப்பேசிச் செயலியை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அத்தகைய குற்றச்செயல்களுக்கு அவர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள்.
“அதே சமயத்தில் மோசடி சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால், காவல்துறையின் நேரடித் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு அல்லது காவல்துறையின் இணையப்பக்கம் வழியாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைத்திருக்கப்படும்,” என்று காவல்துறை கூறியுள்ளது.