சண்முகம்: காவல்துறை எதற்கும் தயாராக இருக்க வேண்டும்

அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூர் பொது ஒழுங்கு தொடர்பான கடுமையான குற்றச் சம்பவங்களை எதிர்கொண்டதில்லை. ஆனால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

2019 ஹாங்காங் போராட்டங்கள், 2021 அமெரிக்கா ‘கேப்பிடல் ஹில்’ கலவரங்கள், 2019ல் கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு போன்று சூழ்நிலைகள் மிக விரைவில் எதிர்மறையாக மாறக்கூடும் என்று திரு சண்முகம் கூறினார்.

மண்டாயில் உள்ள உள்துறைக் குழுவின் திறன் உத்தி மையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியத்தின் (எஸ்ஓசி) 70வது ஆண்டு விழாவில் அவர் இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டார்.

இது, பொது ஒழுங்கு, பாதுகாப்பு மிரட்டல்களிலிருந்து தேசத்தைப் பாதுகாக்கும் 900க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் உயர் மட்டப் படையாகும்.

இதில் சிறப்பு திறன் உத்தி மீட்புப் பிரிவு, காவல்துறை நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் கே-9 பிரிவு, ஆயுதமேந்திய குற்றவாளிகள், பயங்கரவாத சம்பவங்களைச் சமாளிக்கும் காவல்துறை திறன் உத்திப் பிரிவு (பிடியூ) ஆகியவை அடங்கும்.

ஒரு காலத்தில் ஆசியாவின் ஆகச் சிறந்த காவல்துறைப் படை என்று அழைக்கப்பட்ட ஹாங்காங் காவல்துறையினர் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மிகவும் மதிக்கப்படுபவர்கள். ஆனால் 2019ஆம் ஆண்டு போராட்டத்தின்போது, நாட்டின் சட்ட விதிமுறை காரணமாக போராட்டம் வன்முறையாக வெடிக்கும்வரையில் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது, காவல்துறையினர் மிகவும் இக்கட்டான சூழ்நிலை சிக்கிக்கொண்டனர். பலத்தைப் பயன்படுத்தால் அவர்களால் நிலைமைக் கட்டுக்குள் கொண்டவரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்று திரு சண்முகம் கூறினார்.

ஒரே இரவில், ஹாங்காங்கின் நிலைமை மாறியது என்றார் அவர்.

எஸ்ஓசி படையை இறக்க வேண்டிய நிலையை அடைவதைத் தவிர்க்க, சமூகப் பிரச்சினைகள், பிளவுகளை முளையிலேயே கையாள்வதும், நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்தும் கொள்கைகளை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பணி என்று திரு சண்முகம் கூறினார்.

எனினும், சிங்கப்பூர் தனது கொள்கைகளைத் தொடரும் அதே வேளையில், அது எஸ்ஓசி போன்ற படைகளிலும் பெருமளவில் முதலீடு செய்து அவர்களின் திறன்களை வலுப்படுத்தும்.

தற்போது, உறுதியான, அறுதியான நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான திறன் உத்திகளைப் பெற எஸ்ஓசியின் அதிகாரிகள் தீவிர பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

உத்திபூர்வ ஆளில்லா வானூர்தி, காவல்துறை நாய்கள் மீது பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் போன்ற அண்மைய தொழில்நுட்பங்கள், உபகரணங்களிலும் சிங்கப்பூர் முதலீடு செய்கிறது என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு எஸ்ஓசி பிரிவுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நெருக்கடிகாலப் பேச்சுவார்த்தைப் பிரிவு, சிறப்பு மகளிர் பணிக் குழு, ஐக்கிய நாடுகள் அமைதிப் படை போன்ற அது மேற்பார்வையிடும் பிற பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற அணிவகுப்பும் இடம்பெற்றது.

அணிவகுப்பில் எஸ்ஓசியின் சிவப்பு திறன் உத்தி தாக்குதல் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து அதிகாரிகளைக் காப்பாற்றக்கூடிய கவச உடலைக் கொண்ட அதன் கருப்பு திறன் உத்தி தாக்குதல் வாகனங்கள், கருப்பு மோட்டார் சைக்கிள்களில் சவாரி செய்த விரைவுப் படைகளின் அதிகாரிகளுடன் சேர்ந்து பவனி வந்தன. 2013 லிட்டில் இந்தியா கலவரங்களுக்குப் பிறகு அதிகாரிகள் சம்பவ இடத்தை விரைந்து அடைய இந்த மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

30 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஓசியின் 100வது ஆண்டு விழாவில் திறக்கப்பட வேண்டிய காலப் பெட்டகம் ஒன்றையும் அமைச்சர் சண்முகம், காவல் துறை ஆணையர் ஹூங் வீ டெக், மூத்த காவல்துறை உதவி ஆணையாளர் ஆர்தர் லோ ஆகியோருடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

70வது ஆண்டு வில்லையுடன் வெவ்வேறு எஸ்ஓசி பிரிவுகளின் வில்லைககளில் திரட்டு, அதிகாரிகளுக்கிடையேயான பிணைப்பைக் குறிக்கும் எஸ்ஓசி சவால் நாணயம், வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கும் எஸ்ஓசி அதிகாரிகள் அணிந்த சிவப்புத தலையங்கி ஆகிய மூன்று பொருள்கள் அந்தக் காலப்பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

மரியா ஹெர்டோக் இனக் கலவரத்தைத் தொடர்ந்து 1953ஆம் ஆண்டில் ஆயத்தநிலைப் பிரிவாக எஸ்ஓசி தொடங்கப்பட்டது.

பொது ஒழுங்குச் சம்பவங்களைக் கையாள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹாக் லீ பேருந்துக் கலவரம், புலாவ் செனாங் சிறைக் கலவரம், இனக் கலவரம் போன்ற சம்பவங்களை நிர்வகிப்பதில் அதிகாரிகள் முக்கியப் பங்காற்றினர்.

ஆயத்தநிலைப் பிரிவு பின்னர் 1980ஆம் ஆண்டில் காவல்துறை அதிரடிப் படை என்று மறுபெயரிடப்பட்டது. மேலும் 1992ஆம் ஆண்டில் காவல்துறை திறன் உத்திக் குழு, காவல்துறை நாய் பிரிவு ஆகிய இரண்டு காவல்துறை பிரிவுகளுடன் இணைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!