தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் விபத்து

1 mins read
a35a8079-1de1-4ca5-8117-353f27494e5e
நவம்பர் 10ஆம் தேதியன்று இந்த விபத்து ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் நிகழ்ந்தது. - படம்: SG ROAD VIGILANTE ஃபேஸ்புக்

ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் (இசிபி) வெள்ளிக்கிழமையன்று வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மூன்று தடங்களைத் தாண்டி சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் எவருக்கும் காயமில்லை.

சாங்கியை நோக்கிச் செல்லும் இசிபி-யில் நிகழ்ந்த விபத்து பற்றி தங்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.

மூன்று தடங்கள் கொண்ட இசிபி-யின் ஆக இடத்தடத்தில் சென்றுகொண்டிருந்த வேன், மற்ற வாகனங்களைவிட வேகமாகச் சென்றது என்று SG Road Vigilante ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியில் பார்க்க முடிந்தது.

திடீரென அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக வாகனங்களுக்கு இடையே சென்று சாலையின் மத்தியில் சாலைத் தடுப்பாக வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகளின் மீது மோதி, எதிர்சாலைக்குச் சென்று விட்டது.

விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணை தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்