900க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்களுக்கு கடந்த ஈராண்டுகளில் உதவி

இதுவரை எந்தவொரு பராமரிப்பாளர் ஆதரவுக் குழுவிலும் இடம்பெற்றிராத 900க்கும் மேற்பட்ட சிறப்புத் தேவையுடையவர்களைப் பராமரிப்பவர்களுக்கு கடந்த ஈராண்டுகளில் உதவி வழங்கப்பட்டுள்ளது.

‘புரோஜெக்ட் 3ஐ’  திட்டத்தின் மூலமாக பயனடைந்த 3,900க்கும் மேற்பட்ட இத்தகைய பராமரிப்பாளர்களில் இவர்கள் ஒரு பகுதியினர். ‘கேரிங்எஸ்ஜி’ அமைப்பு 2021ல் இந்த திட்டத்தைத் தொடங்கியது.

எனேபலிங் வில்லேஜ் வளாகத்தில் நடைபெற்ற தேசிய பரிவு விழாவில் (கேர்கார்னிவெல்) தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ‘புரோஜெக்ட் 3ஐ’ திட்டம் குறித்த விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டார். பராமரிப்பாளருக்கான ஆதரவை வலுப்படுத்த நவம்பர் மாதம் இடம்பெறும் தேசிய பரிவு விழா, மாநாட்டின் ஓர் அங்கம் இந்த நிகழ்வு.

‘எஸ்ஜிஎனேபல்’, ‘கேரிங்எஸ்ஜி’ அமைப்புகள் நடத்தும் இந்த விழாவில் பல்வேறு சமூகச் சேவை அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் பங்குபெற்றன. அவை பராமரிப்பாளர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் வளங்களைப் பகிரும் வகையில் பயிலரங்குகள், உரைகளை நடத்தின.

“பல குடும்பங்களுக்கு, பராமரிப்பு என்பது அன்பையும் தியாகத்தையும் குறிப்பது. ஏன் செய்ய வேண்டும் என்று நாம் கேள்வி எழுப்பவதில்லை. இது கடினமான, மனஉளைச்சல் தரும் உறுதிப்பாடாகும்,” என்றார் அமைச்சர் லீ. 

“இந்தப் பயணத்தில் நீங்கள் தனித்துவிடப்படவில்லை. சக பராமரிப்பாளர்களுடன் இணையுங்கள்,” என்று அவர் பராமரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

கம்போங் அட்மிரல்டி, ஹார்ட்பீட்@பிடோக் ஆகிய இடங்களில் முறையே நவம்பர் 18, 25ஆம் தேதிகளில் இதேபோன்ற இரு விழாக்கள் நடைபெறும்.

பகிர்ந்துகொள்ளப்பட்ட வளங்களைப் பராமரிப்பாளர்களுக்கு வழங்கும் ‘புரோஜெக்ட் 3ஐ’ கட்டமைப்பின் சாதனைகளைத் திரு லீ தமது உரையில் எடுத்துரைத்தார்.

இதன் பின்னணியில் செயல்படும் கேரிங்எஸ்ஜி அமைப்பு, கொவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்காக சிறப்புத் தேவையுடையோரின் பராமரிப்பாளர்களால் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் பராமரிப்பாளர்களுக்கு வழிகாட்டி சேவைகளை வழங்குகிறது. மேலும் தெரபி சிகிச்சை, ஆலோசனை சேவைகள் போன்ற தொழில்முறை ஆதரவு சேவைகளை வழங்குகிறது.

பூன் லேயிலும் கம்போங் கிளாமிலும் இரு முன்னோடித் திட்டங்களுடன் தொடங்கப்பட்ட ‘திட்டம் 3ஐ’ மேலும் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட், நன்யாங், பைனியர், தெலுக் பிளாங்கா ஆகிய நான்கு வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ‘புரோஜெக்ட் 3ஐ’ திட்டத்தை சான்று, செயலாக்க மையம் மதிப்பீடு செய்ததில் பராமரிப்பாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பராமரிப்பு குறித்த அதிக அறிவையும் புரிந்துணர்வையும் பெற்றனர் என்பது தெரியவந்ததாக சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான லீ குறிப்பிட்டார்.

அவர்கள் சமூகத்துடன் அதிக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதுடன் அவர்களின் குடும்ப நிலைமையும் மேம்பட்டது.

சக பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க 100க்கும் மேற்பட்ட சமூகத் தொண்டூழியர்களுக்கும் அனுபவமிக்க பராமரிப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சமூகம் மூப்படைந்து வரும் நிலையில், பராமரிப்புப் பணி மிகவும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் அமைகிறது. பராமரிப்பாளர்களுக்கு ஆதரவான ஒரு சமூகத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் லீ கூறினார்.

சில பராமரிப்பாளர்களுக்கு, அவர்கள் பராமரிப்பவர்களுக்கு கொடுப்பதைத் தவிர அவர்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை என்ற அமைச்சர், அவர்கள் தங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டினார். அப்போதுதான், தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிக்க சிறந்த நிலையில் அவர்களால் இருக்க முடியும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!