லாரன்ஸ் வோங்கைப் பாராட்டிய மோடி

லாரன்ஸ் வோங்கைப் பாராட்டிய மோடி

1 mins read
9a3b931a-b67b-4f38-a0fe-80a8c4b6db91
சித்தார் வாசிக்க எப்படி அமர்வது என்பதை திரு கார்த்திகேயனிடம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கற்றுக்கொள்கிறார். - படம்: எக்ஸ் தளத்தில் வெளியான காணொளி
multi-img1 of 2

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சித்தார் இசைக்கருவியை வாசிக்கப் பழகுவதைக் காட்டும் காணொளிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திரு வோங்கின் இசை ஆர்வம் மற்றவர்களுக்கும் தூண்டுகோலாக விளங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“செவிக்கினிய இந்த மெல்லிசை முயற்சிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் இசை வரலாறு பல்வேறு மாறுபட்ட இழைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒன்று. பல நூற்றாண்டுகளாக மலர்ச்சிகண்ட தாளங்களின் தொனி அதில் நிறைந்துள்ளது,” என்று திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைப் பாராட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைப் பாராட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு. - படம்: இணையம்

துணைப் பிரதமர் வோங், திரு கார்த்திகேயன் எனும் இசைக் கலைஞரிடம் தாம் சித்தார் இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொண்ட அனுபவம் சிறப்பாக இருந்ததாகத் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் திரு ராமக்கிருஷ்ணன் கார்த்திகேயனுடன் இணைந்து துணைப் பிரதமர் வோங் தமிழில் தீபாவளி வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த காணொளியில் திரு வோங்கிற்கு சித்தார் வாசிக்கக் கற்றுக் கொடுத்த திரு கார்த்திகேயன், 40, அது சிறந்த மறக்க முடியாத அனுபவம் என்று தமிழ் முரசிடம் கூறினார்.

தேசிய சுகாதாரக் குழுமத்தில் மேலாளராக பணிபுரியும் திரு கார்த்திகேயன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சித்தார் பயின்று வருகிறார். தீபாவளிப் பண்டிகை காலத்தில் இந்தியக் கலாசாரத்தின் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் காணொளி தயாரிக்கப்பட்டது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்