10 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 குறைவு

10 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 குறைவு

1 mins read
a2206a6d-0299-4185-84b0-afc3866cc214
டிசம்பர் பள்ளி விடுமுறையின்போது 10 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 குறைக்கப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எதிர்வரும் டிசம்பர் மாத விடுமுறையின்போது சிங்கப்பூரிலுள்ள 10 விரைவுச்சாலைப் பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) $1 குறையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

நகரை நோக்கிச் செல்லும் அலெக்சாண்ட்ராவுக்கு முன்னதாக உள்ள ஆயர் ராஜா விரைவுச்சாலை, பிரேடல் ரோட்டுக்கு முன்னதாக உள்ள தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலை போன்றவை இந்த இடங்களில் அடங்கும்.

இந்தக் கட்டணக் குறைவு, பெரும்பாலும் காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த மாற்றம் நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஒரு முடிவுக்கு வரும். அதன் பின்னர், ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளி விடுமுறைக்கு முந்தைய கட்டணமுறை மீண்டும் நடப்புக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்