பிரதமர் லீயுடன் அளவளாவி மகிழ்ந்த சிலிக்கான் வேலி சிங்கப்பூரர்கள்

1 mins read
cc20dbe9-f042-4d58-bc82-fbff12e57541
சான் ஃபிரான்சிஸ்கோ சென்றுள்ள பிரதமர் லீ சிலிக்கான் வேலி சிங்கப்பூரர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்தார். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

சான் ஃபிரான்சிஸ்கோ: புவிசார் அரசியல் பேச்சுடன் கொஞ்சம் கோழிச் சோறு. இப்படித்தான் பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமையன்று தமது மாலை வேளையை சிலிக்கான் வேலி சிங்கப்பூரர்களுடன் கழித்தார்.

ஏபெக் தலைவர்களுக்கான வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள திரு லீ, ‘த வெஸ்டின் சான் ஃபிரான்சிஸ்கோ’ விமான நிலையத்தின் நிகழ்வு மண்டபத்தில் ஏறத்தாழ 500 சிங்கப்பூரர்களைச் சந்தித்துப் பேசினார்.

“உலகின் சிக்கலான ஒரு பகுதியின் மையத்தில் நாம் மிகச் சிறிய நாடாக இருக்கிறோம். அமெரிக்கா ஒரு பெரிய கண்டம், உலகின் ஆற்றல்மிக்க ஒரு சக்தி அது. இருப்பினும், இரு நாடுகளும் இணைந்து செயல்படவே செய்கிறோம். நம் உறவும் நட்பும் இருதரப்புக்கும் பலன் தருகின்றன,” என்று கூறினார் பிரதமர் லீ.

கொவிட்-19க்குப் பிறகு வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்கள் ஒன்றுகூடிய ஆகப் பெரிய கூட்டம் இது என்றார் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் லுய் டக் இயூ.

குறிப்புச் சொற்கள்