கவனமின்றி காவல்துறை காரை ஓட்டியதாகமுன்னாள் தேசிய சேவையாளர் மீது குற்றச்சாட்டு

கவனமின்றி காவல்துறை காரை ஓட்டியதாகமுன்னாள் தேசிய சேவையாளர் மீது குற்றச்சாட்டு

1 mins read
35a8b33f-c42c-405e-b2f0-504a28b048d9
முன்னாள் தேசிய சேவையாளரான சோங் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முன்னாள் முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் மீது கவனமின்றி காவல்துறையின் காரை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022 ஜூன் மாதம் சோங் செங் ஹுவான் சாலையின் வலதுபுறம் திரும்பினார். அப்போது அவரது கார், 55 வயது நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

காயம் அடைந்த நபர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரா அல்லது அதன் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து வந்தவரா என்பது குறித்து தகவல் இல்லை.

புதன்கிழமை அன்று சோங், 23, மீது முறையாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் கவனிக்காமல் காரை ஓட்டியதாகவும் இதில் 55 வயது நபர் காயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 2, அவென்யூ 5 சந்திப்பை அடைந்த சோங் சுற்றும் முற்றும் பார்க்காமல் அவென்யூ 5ல் காரை திருப்பியபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தியது.

வரும் டிசம்பர் 22ஆம் தேதி சோங் குற்றத்தை ஒப்புக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்படும் என்று காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்