தேவாலயத்தில் பெண்களை ஆபாசமாக காணொளி எடுத்த இளைஞர்

தேவாலயத்தில் பெண்களை ஆபாசமாக காணொளி எடுத்த இளைஞர்

1 mins read
65b30e07-35bc-4548-b48c-d894420b6741
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவாலயத்திலும் கடைத்தொகுதி ஒன்றிலும் பெண்களுக்குத் தெரியாமல் இளைஞர் ஒருவர் ஆபாசமாக காணொளிகள் எடுத்துள்ளார். அவர் மீதான குற்றம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

உயிரை மாய்த்துக்கொள்ளும் உணர்வுகளுடன் இருந்த தமது தோழியையும் அந்த இளையர் விட்டுவைக்கவில்லை. தோழி ஆடை மாற்றும் போது அந்த இளைஞர் தனது கைப்பேசி மூலம் படம் எடுத்துள்ளார்.

இளையர் அந்த குற்றங்கள் செய்யும் போது அவருக்கு 14 வயது என்றும் அவர் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

இளையர் குறைந்தது 25 ஆபாசக் காணொளிகளை அவர் படமெடுத்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, தற்போது 20 வயதான அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இளையர் தற்போது தேசிய சேவை ஆற்றி வருவதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியிருந்தது. குற்றவாளிக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்