சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனத்தின் முன்னாள் மூத்த துணைத் தலைவர் லியாங் அன் வே, 2013ல் அந்த வேலைக்கு விண்ணப்பித்தபோது தமது பணி விவரங்களை தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதன் விளைவாக, 2018ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட லியாங் அன் வே, சிங்போஸ்ட்டை ஏமாற்றி, அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊதியத்தைவிட அதிக ஊதியத்தைப் பெற்றார். மொத்தம் $8,000 அதிக சம்பளத்தை அவர் பெற்றார்.
மற்றொரு சம்பவத்தில், லியாங், 48, 2015ல் யூனோஸ் சாலையில் உள்ள சிங்போஸ்ட் நிலையத்தின் பணிகளுக்கு பரிந்துரைப்பதற்கு கைமாறாக பிண்டாய் கின்டென்கோவி எனும் நிறுவனத்திடமிருந்து $1 மில்லியன் லஞ்சம் பெற முயன்றுள்ளார்.
இந்தக் குற்றங்களுக்காக லியாங்கிற்கு வியாழக்கிழமை ஆறு மாதம், ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

