சிண்டா திட்டத்துக்கு இந்திய முஸ்லிம் பேரவை நன்கொடை

சிண்டா திட்டத்துக்கு இந்திய முஸ்லிம் பேரவை நன்கொடை

1 mins read
d4a702de-1488-4a73-99c2-8909c09581ba
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் தனிநபர்களும் தங்கள் நன்கொடைகளை இந்திய மரபுடைமை நிலையத்தில் உள்ள சிண்டாவின் கூடாரத்திற்குச் சென்று வழங்கினர்.  - படம்: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை

இந்திய முஸ்லிம் பேரவையில் அங்கம் வகிக்கும் இணை அமைப்புகள் சென்ற ஆண்டிலிருந்து தங்கள் நன்கொடைகளை ஒன்றிணைந்து வழங்கி வருகின்றன.

இம்மாதம் 10ஆம் தேதி மாலையில் இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிண்டா கூடத்திற்குச் சென்ற இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினரை சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி இரா. அன்பரசு வரவேற்றார்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் திரு முஹம்மது பிலால், சிண்டாவின் புரோஜெக்ட் கிவ் திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய இணை அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, சிண்டாவின் பண்டிகைக் கால பரிசுப் பைகளையும், என்டியுசி பற்றுச்சீட்டுகளையும் தேவையுடையோர் இல்லங்களுக்கே சென்று கொடுக்கும் தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், இதுபோன்ற உதவிகளுக்கு வரும் ஆண்டுகளிலும் இணை அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சார்பில் நன்கொடை காசோலை திரு அன்பரசிடம் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்