அக்டோபரிலும் ஏற்றுமதி குறைந்தது; எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் 3.4% சரிவு

அக்டோபரிலும் ஏற்றுமதி குறைந்தது; எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் 3.4% சரிவு

2 mins read
c6921cc3-583f-4645-80ba-7abf152f61bf
சிங்கப்பூரின் ஆகப் பெரிய சந்தைகளான தைவான், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கான ஏற்றுமதி ஒரேயடியாகச் சரிந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்திலும் குறைந்தது. அந்த மாதத்தில், எண்ணெய் சாரா ஏற்றுமதி, எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் 3.4 விழுக்காடு சரிவு கண்டது. இது ஆண்டு அடிப்படையில் 13வது இறக்கம் ஆகும்.

இருப்பினும், பதிவான எண்ணிக்கை ஏற்றுமதி தொடர்ந்து முன்னேறுவதை உணர்த்தி உள்ளது. ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் இந்த விவரம் தெரிய வந்தது.

செப்டம்பரில் 13.2 விழுக்காடு சரிவு பதிவாகியிருந்த வேளையில் அக்டோபர் மாதம் அதைவிடக் குறைந்தது.

மின்னணு மற்றும் மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதி அக்டோபரில் சரிந்ததும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

ஆண்டு அடிப்படையில், மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 5.6 விழுக்காடு குறைந்தது. செப்டம்பரில் அந்த வீழ்ச்சி 11.6 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.

குறிப்பாக, ஒருங்கிணைந்த மின்சுற்று சாதனங்கள் மற்றும் கணினிகளுக்கான பாகங்களின் ஏற்றுமதி சுருங்கியது.

அதேபோல, மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதியும் அக்டோபரில் 2.7 விழுக்காடு சரிந்தது. இருப்பினும், 13.7 விழுக்காடு சரிவு பதிவான செப்டம்பரைக் காட்டிலும் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

அந்தத் துறைக்கான ஏற்றுமதி குறைந்ததற்கு உணவு தயாரிப்புப் பொருள்கள், மின்சாரமற்ற இயந்திரங்கள் மற்றும் மின்சார சாதனங்கள் பெரிதும் பங்களித்தன.

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய சந்தைகளுக்கான ஏற்றுமதி ஒரேயடியாகச் சரிந்தன. குறிப்பாக, தைவான், அமெரிக்கா மற்றும் தென்கொரிய சந்தைகளுக்கான ஏற்றுமதி குறைவாகப் பதிவானது.

அதேநேரம், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் போன்றவற்றுக்கான ஏற்றுமதி அதிகரித்தது.

இருப்பினும், இறக்குமதியோடு ஒப்பிடுகையில், அக்டோபர் மாதம் ஒட்டுமொத்த வர்த்தகம் ஏற்றம் கண்டது.

2022ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் ஒட்டுமொத்த வர்த்தகம் 0.3 விழுக்காடு கூடியது. எண்ணெய் வர்த்தகம் அதிகரித்தது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்