வாட்ஸ்அப் ஆய்வு என்ற மோசடி: எஸ்பிஎச் நிறுவனத்துடையது அல்ல

வாட்ஸ்அப் ஆய்வு என்ற மோசடி: எஸ்பிஎச் நிறுவனத்துடையது அல்ல

1 mins read
7bf20e5d-f134-40ed-9184-065510984d22
மோசடிக்காரர்கள் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் திரைப்பட விமர்சகர்கள் எனக் கூறி வாட்ஸ்அப் செயலில் தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு $8லிருந்து $288 வரை சன்மானம் வழங்குவதாக உறுதி கூறினர். - படங்கள்: எஸ்டி வாசகரின் ஃபேஸ்புக் பக்கம்
Google News Preferred Icon

வாட்ஸ்அப் செயலியில் மோசடிக்காரர்கள் எஸ்பிஎச் நிறுவனத்தைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர்கள் என தங்களைக் கூறிக்கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கின்றனர் என்று எஸ்பிஎச் மீடியா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற குறுந்தகவல்கள் பொய்யானவை என்றும் மோசடி என்றும் எஸ்பிஎச் மீடியா நிறுவனம் கூறுகிறது.

இதில் மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்போருக்கு $8லிருந்து $288 வரை சன்மானம் தருவதாகவும் உறுதி கூறுவது கண்டறியப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் தங்கள் கியானா என்றும் லிவியா என்றும் அறிமுகம் செய்துகொண்டு திரைப்பட, தொலைக்காட்சி தகவல்கள் சேகரித்து வருவதாக கூறிக்கொள்வது தெரியவந்துள்ளது.

இது குறித்து நவம்பர் 17ஆம் தேதி கருத்துரைத்த எஸ்பிஎச் மீடியா பேச்சாளர் ஒருவர், மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் ஊழியர்கள்போல் வலம் வருவது தங்களுக்கு தெரியும் என்று கூறியது.

“எஸ்பிஎச் மீடியா நிறுவனம் மறைச்சொல், நிதி விவரங்கள் போன்ற ரகசிய தனிநபர் தகவல்களையோ, அல்லது கட்டணம் செலுத்தச் சொல்வதோ வாட்ஸ்அப் செயலி மூலம் கோராது,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்