பள்ளி விடுமுறை குதூகலம்

சிங்கப்பூரில் ஆண்டிறுதி பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டது. இந்த பள்ளி விடுமுறையில் தங்கள் பிள்ளைகள் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற சிந்தனை பெற்றோருக்கு இருக்கும்.

பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தமான கேலிச்சித்தர கதாபாத்திரங்களை நேரில் பார்ப்பது, குளிர்காலம் மற்றும் பனிச் சறுக்கு நடவடிக்கைகளை அனுபவிப்பது போன்ற தெரிவுகள் உள்ளன.

பள்ளி விடுமுறையன்று குடும்பங்கள் ஒய்வெடுக்கவும் ஒன்றாக நேரத்தைச் செலவிடவும், விளையாடவும், அறப்பணிகளில் பங்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச அல்லது நுழைவுச்சீட்டு வாங்க வேண்டிய சில நடவடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.

கேன்டி ஸ்னோ ஹவுஸ் மற்றும் கேன்டி கார்னிவல்

சாங்கி விமான நிலையம் முனையம் 3ல், வருகைப் பகுதிக்கு வெளியே பேருந்துகள் நிறுத்துமிடத்துக்கு அருகில் கேன்டி ஸ்னோ ஹவுஸ் அமைந்துள்ளது.

குளிர்காலத்தை கருப்பொருளாகக் கொண்ட இந்த கேளிக்கை மைதானம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

ஒருமணி நேரத்துக்கான நுழைவுச் சீட்டுக் கட்டணம் $18. கட்டணத்தை சாங்கி செயலி மூலம் செலுத்தலாம்.

பெரியவர்களுக்கும் மூன்று வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கும் குளிர்கால மேலங்கியும் பனிக்கால காலணிகளும் வாடகைக்குத் தரப்படும்.

அவற்றுக்குக் கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை.

மூன்று வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தங்களுக்குச் சொந்தமான குளிர்கால மேலங்கி மற்றும் பனிக்கால காலணிகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்விடத்துக்குச் செல்ல வயது வரம்பு இல்லை. இருப்பினும், எழு வயதுக்குக் குறைவான சிறுவர்களுடன் பெரியவர்கள் இருக்க வேண்டும்.

அங்குள்ள கேன்டி கார்னிவலுக்கு அனுமதி இலவசம். ஆனால் விளையாட்டுகள் பனிச் சறுக்குகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட டோக்கன் தேவைப்படும்.

ஐஸ் மேஜிக்: வின்டர் வான்டர்லேண்ட்

ஐஸ் மேஜிக் பனிப் பூங்கா 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

இதில் பனி தொடர்பான விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

இந்த பனிப் பூங்கா 12A பேஃபிரண்ட் அவென்யூ, பேஃபிரண்ட் இவென்ட் ஸ்பேசில் அமைந்துள்ளது.

அடுத்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 21ஆம் தேதி வரை இப்பூங்கா இயங்கும்.

காலை 10 மணிக்கும் மாலை 6.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு நாளும் மூன்று நுழைவு, நடவடிக்கை நேரங்கள் ஒதுக்கப்படும்.

நுழைவுச்சீட்டு கட்டணத்துக்கான விலை $19லிருந்து $49 வரை (பதிவுக் கட்டணம் சேர்க்கவில்லை).

www.sistic.com.sg/events/icemagicg2023 எனும் இணையப்பக்கத்திலிருந்து நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

நுழைவுச்சீட்டு வாங்குபவர்கள் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பனிப் பூங்காவில் இருக்கலாம்.

இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

பெரியவருக்கும் இரண்டு வயதுக்கு அதிகமான சிறுவர்களுக்கும் குளிர்கால மேலங்கி, பனிக்கால காலணிகள் ஆகியவை வாடகைக்குத் தரப்படும்.

இவற்றுக்காகக் கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை.

இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகள் அவர்களது சொந்த நீண்ட காற்சட்டை, காலுறை, கையுறை ஆகியவற்றை அணிந்துகொள்ள வேண்டும்.

ஹாலிடே வன்டர்லேண்ட் வித் லைன் ஃபிரண்ட்ஸ்

லைன் ஃபிரண்ட்ஸ் கேலிச்சித்திரத்தை கருப்பொருளாகக் கொண்ட விளையாட்டுத் தளத்தில் சிறுவர்கள் இனிதே நேரத்தைச் செலவிடலாம்.

இந்த விளையாட்டு மைதானம் 3 தெமாசெக் பொலிவார்ட், சன்டெக் சிட்டி டவர் 1 மற்றும் அட்ரியத்தில் அமைந்துள்ளது.

இது அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

அனுமதி இலவசம்.

கூடுதல் தகவலுக்கு www.sunteccity.com.sg/holiday-wonderland-line-friends எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.

வார்னர் பிரதர்ஸ்100 செலபரேட்டிங் எவரி ஸ்டோரி

வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோ அதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

சூப்பர்மேன், வன்டர்வுமன், பேட்மேன், தி ஃபிளாஷ் போன்றபிரபல வார்னர் பிரதர்ஸ் சூப்பர் ஹீரோக்களின் ஆள் உயர பொம்மைகளுடன் படமெடுத்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாது, லூனி டூன்ஸ் கேலிச்சித்திர கதாபாத்திரங்களையும் கண்டு மகிழலாம்.

இடம்: சிலோசோ கடற்கரை. செந்தோசா

இந்தக் கண்காட்சி இம்மாதம் 26ஆம் தேதி வரை காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாள்தோறும் திறக்கப்பட்டிருக்கும்.

அனுமதி இலவசம்.

இமர்சிவ் டிஸ்னி எனிமேஷன்

360 டிகிரி பரிமாணத்தில் டிஸ்னி இயங்குபடத்தைக் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட காட்சி அமைப்புகளுடன் டிஸ்னிக்குச் சொந்தமான படங்கள் காண்பிக்கப்படும்.

நுழைவுச்சீட்டின் விலை $33லிருந்து $78 வரை.

நுழைவுச்சீட்டுகளை வாங்குவோருக்கு இருவழித் தொடர்பு மணிக்கட்டுப் பட்டை வழங்கப்படும். அது படக்காட்சிகளுக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

இந்த இயங்குபட நிகழ்ச்சி 4 பேஃபிரண்ட் அவென்யூ, சேண்ட்ஸ் தியேட்டர், மரினா பே சேண்ட்சில் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சிங்கப்பூர் கேபிள் கார் வித் போக்கிமோன்

பிரபல கேலிச்சித்திரம் போக்கிமோனைக் கருப்பொருளாகக் கொண்டு சிங்கப்பூர் கம்பி வண்டிகள் இந்தப் பள்ளி விடுமுறையில் இயக்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூர் கம்பி வண்டி அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது.

இதனையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மவுண்ட் ஃபேபர் பாதையில் செல்லும் 67 கம்பி வண்டிகளின் உட்புறங்கள் போக்கிமோன் கேலிச்சித்திரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

மவுண்ட் ஃபேபரின் உச்சியிலிருந்து கம்பி வண்டிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு இலவச போக்கிமோன் தொப்பியைப் பெற்றுக்கொள்ளவும்.

இடம்: 109 மவுண்ட் ஃபேபர் சாலை

இந்தச் சிறப்புப் பயணம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 8.45 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

booking.mountfaberleisure.com எனும் இணையப்பக்கத்திருந்து இருவழிப் பயணத்துக்கான பயணச்சீட்டுகளை வாங்கலாம். அவ்வாறு வாங்கினால் பெரியவர்களுக்கான கட்டணம் $26.40, சிறுவர்களுக்கான கட்டணம் $17.60.

நான்கு வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!