தன்னம்பிக்கையுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிறார்களைத் தயார்ப்படுத்தும் பாலர் பள்ளிகள்

தன்னம்பிக்கையுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிறார்களைத் தயார்ப்படுத்தும் பாலர் பள்ளிகள்

2 mins read
bf99ff3b-9e30-43ef-883a-28cdbcb9a102
தோ பாயோ மெத்தடிஸ்ட் பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 2 மாணவர்கள் சீன மொழியைக் கற்க இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பைப் சொல்லித் தருவது குறித்த யோசனை சிலருக்குப் பொருத்தம் இல்லாததாகத் தோன்றலாம்.

ஆயினும், ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ பாலர் பள்ளிகளில் இத்தகைய அம்சங்கள் குறித்து சிறார்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் நடத்தப்படும் மின்னிலக்க கல்வியறிவு பாடத்தில் இவை சொல்லித் தரப்படுகின்றன.

‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ நடத்தும் 20 பாலர் பள்ளிகளிலும் பாலர் வகுப்பு 1 மற்றும் 2 மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தேசிய கல்விக் கழகத்தில் ஆங்கில மொழி, இலக்கியத் துறையில் ஆய்வுப் பிரிவுத் துணைத் தலைவரான இணைப் பேராசிரியர் லோ சின் ஈ, மின்னிலக்கச் சாதனங்கள் எங்கும் உள்ள, இணைய வளங்களை எளிதில் பெறக்கூடிய இன்றைய சூழலில் மின்னிலக்க நலன் குறித்த அம்சங்களை மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில், தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் மின்னிலக்கக் கற்றல் முறைக்கு மாறும் நிலை ஏற்பட்டது.

அதேபோல, இணையக் கற்றலுக்கு சிறார்களைத் தயார்ப்படுத்த பாலர் பள்ளிகளும் சொந்த திட்டங்களை வகுத்துள்ளன.

மொழிக் கற்றலுக்கு சில பாலர் பள்ளிகள் நிரலிடுதலையும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்துகின்றன. தோ பாயோ மெத்தடிஸ்ட் பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 2 மாணவர்கள் சீன மொழியைக் கற்க இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துகின்றனர்.

தேசிய கல்விக் கழகத்தின் சிறார் மேம்பாட்டு ஆய்வு நிலைய உதவி இயக்குநரான டாக்டர் சன் ஹி, மின்நூல் வாசிப்புத் திட்டத்தின் மூலம் கிடைத்த கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்தார்.

நன்கு வடிவமைக்கப்பட்டுள்ள மின்னிலக்க உள்ளடக்கங்கள், தொடக்கத்திலேயே மாணவர்களிடத்தில் இருமொழி ஆற்றலை ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.

அதிகமான சிறார்கள் மின்னிலக்கச் சாதனங்களில் நேரம் செலவிடும் தற்போதைய சூழலில், இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அறிந்து வைத்திருப்பது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்