அனுமதியில்லாமல் எல்லை தாண்டும் ஆளில்லா வானூர்திகளுக்குத் தடை

1 mins read
ad912ad9-bf63-4666-9874-73760e005dd7
அனுமதியின்றி இயக்கப்படும் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனுமதியில்லா எல்லை தாண்டும் ஆளில்லா வானூர்திகளுக்கு இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்படுகிறது என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையும் திங்கட்கிழமையன்று அறிவித்தன.

அனுமதி வழங்கப்பட்ட ஆளில்லா வானூர்திகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தகுந்த அனுமதி இல்லாமல் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் அல்லது சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆளில்லா வானூர்திகளைச் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றம் புரிபவர்களுக்கு $50,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அனுமதியின்றி இயக்கப்படும் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாமல் இயக்கப்படும் ஆளில்லா வானூர்திகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்