தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கத்திய நாகரிகங்களைப் பின்பற்றும் கிழக்கத்திய இளையர்கள் பற்றி அமைச்சர் ஓங்

2 mins read
371d8d43-fa2b-474c-b754-9d4e9a9fd9f0
அக்டோபர் 27ஆம் தேதியன்று ஷாங்காயில் உள்ள உணவகம் ஒன்றில் ஹலோவீன் விழாவுக்காக அச்சுறுத்தும் வகையில் வேடமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள். - படம்: ஏஎஃப்பி

ஷாங்காயில் உள்ள இளம் சீனர்கள் மேற்கத்திய கலாசாரமான ஹலோவீன் கொண்டாட்டத்தை அண்மையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடியதைக் கலாசார நம்பிக்கையின் அறிகுறி மற்றும் பெருநகரின் வெளிப்படைத்தன்மை என்று குறிப்பிடலாமா என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திரு ஓங், “சிங்கப்பூரைப் பொறுத்தவரை, கேளிக்கைக்காக மட்டும் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு இன்னும் அதிக அனுமதி அளிக்கப்படலாம். அதில் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஒன்றுபட்ட நன்மைக்கும் இடையிலான சமநிலையை அந்தந்த சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

சீன நாளிதழான லியன்ஹ சாவ்பாவ் பெய்ஜிங்கில் நவம்பர் 21 அன்று ஏற்பாடு செய்த இளையர் கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.

ஹலோவீன் விழாவையொட்டி, ஷாங்காயில் உள்ள இளம் சீனர்கள் புகழ்பெற்ற சீன திகில் நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டனர். சிலர் தங்கள் கண்களைச் சுற்றி கறுப்பு வளையங்களை வரைந்துகொண்டனர், சிலர் கொவிட்-19 கிருகியைப் பிரதிபலிக்கும் வகையில் முழுநீள வெண்ணிற ஆடை அணிந்தனர்.

நவம்பர் 2ஆம் தேதி சாவ்பாவ் தான் வெளியிட்ட செய்தியில், ஷாங்காயில் மேற்கத்திய கலாசாரத்தைக் கொண்டாடும் பெரும் ஊர்வலமாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அது மூன்று ஆண்டு பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றுபட்ட உணர்ச்சி வெளிப்பாடு என்று வர்ணித்தது.

செல்டிக் கலாசாரத்தில் உருவான இந்த ஹலோவீன் விழாவில் பின்னர் அமெரிக்க கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டு, பரங்கிக்காய் வடிவ முகமூடிகள் அணிந்து கொண்டாடி வந்ததை திரு ஓங் சுட்டினார்.

“நம்மிடம் ஆசிய பாணியிலான ஹலோவீன் உண்டு. அதை நமது இளையர்கள் பொழுதுபோக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். சிங்கப்பூரைப் பொறுத்தவரையில், அத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு இன்னும் அதிக இடம் கொடுக்கலாம்,” என்று பெய்ஜிங் வெளிநாட்டுக் கல்வி பல்கலைக்கழகத்தின் சீன ஆடவர் கேட்ட கேள்விக்கு திரு ஓங் இவ்வாறு பதிலளித்தார்.

“ஹலோவீன் கொண்டாட்டங்களை இளையர்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகத்தான் பார்க்கிறார்கள், என்று கூறினார் அந்த மாணவர்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஓங், “ஒவ்வொரு சமூகத்துக்கும் சமநிலை அளவுகோள் உண்டு. பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவரும் வேளையில், நாம் தொடர்ந்து அனைவருக்கும் ஏற்ற சமநிலயைக் கண்டறியவேண்டும். அந்த முயற்சியில் வெவ்வேறு கருத்துகள் வெளிவருவது இயல்பானதுதான்,” என்றார்.

ஒருநாள் நடைபெறும் 5வது சிங்கப்பூர்-சீனக் கருத்தரங்கில், இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகத் துறை, பல்கலைக்கழகங்கள், அரசாங்க அமைப்புகள் போன்றவற்றிலிருந்து சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்