போலி இன்ஸ்டகிராம் கணக்கு தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை

போலி இன்ஸ்டகிராம் கணக்கு தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை

1 mins read
215857bf-006b-4878-ac45-bcec530621b4
தமது படத்தைக் கொண்ட போலி இன்ஸ்டகிராம் கணக்கு குறித்து அமைச்சர் கோ போ கூன் எச்சரித்துள்ளார். - படங்கள்: தொடர்பு தகவல் அமைச்சு, ஃபேஸ்புக்

தமது புகைப்படத்தைக் கொண்ட போலி இன்ஸ்டகிராம் கணக்கு குறித்து மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளார்.

இன்ஸ்டகிராம் கணக்கு ‘dr.Philip.Nguyen’ என்ற பெயரில் அமைந்திருந்தாலும் டாக்டர் கோவின் படத்தையும் அவரின் பதிவுகளையும் அது கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்தப் போலி கணக்கிலிருந்து வரக்கூடிய வேண்டுகோள் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் உடனடியாக கணக்குடனான தொடர்பை முடக்கிக்கொள்ளவும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சராகவும் உள்ள டாக்டர் கோ தமது ஃபேஸ்புக் பதிவுவழி நவம்பர் 21ஆம் தேதியன்று கேட்டுக்கொண்டார்.

போலி இன்ஸ்டகிராம் கணக்கை 1,900க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்றும் கணக்கில் 187 பதிவுகள் உள்ளன என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.

ஏற்கெனவே டாக்டர் கோவின் இன்ஸ்டகிராம் கணக்கு இவ்வாறு மோசடிப் பேர்வழிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்