தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்ஐவி நோயுள்ளது தெரிந்தும் மூன்று ஆடவர்களுடன் பாலியல் உறவு கொண்ட திருநங்கைக்குச் சிறை

1 mins read
9e8e4679-1d6b-432d-9d6f-2e1eaf8f921f
படம்: - தமிழ் முரசு

தனக்கு எச்ஐவி கிருமித்தொற்று இருப்பது தெரிந்தும் தன்னுடன் பாலியல் உறவுகொண்ட மூன்று ஆடவர்களுடன் அதைப் பற்றி தெரிவிக்காத திருநங்கையான முகம்மது ஃபாஸ்னி முகம்மது அஸினிக்கும் செவ்வாய்க்கிழமை மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபாஸ்னியுடன் பாலுறவு கொண்ட அவரது நண்பருக்குப் பின்னர் எச்ஐவி கிருமி இருப்பது தெரிய வந்தது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது 38 வயது ஃபாஸ்னியிடமிருந்துதான் தொற்றியது என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

திருநங்கையுடன் பாலுறவு கொண்டவர்களை திரு இ என்றும் திரு பி என்றும் ஆணவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்னியின் மருத்துவ நிலைமையைக் காரணம் காட்டி அவரது அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று முன்னதாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், இத்தகைய தடை உத்தரவு குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்று அரசுத் தரப்பு வாதிட்டதால் தடை நவம்பர் 21ஆம் தேதி விலக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி மார்வின் பே, “பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒருமுறைதான் சந்தித்துள்ளனர்,” என்றார்.

திரு இ, திரு பி இருவருடன் ஃபாஸ்னி கொண்ட பாலியல் உறவு தொடர்பான விசாரணைக்குப் பிறகு நீதிபதி பே, ஃபாஸ்னி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்