குற்றத்தை ஒப்புக்கொண்ட பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி

குற்றத்தை ஒப்புக்கொண்ட பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
d6e6379e-47c5-43b8-8e22-221e37726753
சாவ் சாங்பெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாவ் சாங்பெங் பதவி விலகியுள்ளார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவற்கு எதிராக அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை மீறியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இது 4.3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$5.76 பில்லியன்) தொகையுடன் தொடர்புடையது.

இதற்கு அபராதமாக சாவ் தனிப்பட்ட முறையில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே அமெரிக்க வரலாற்றில் விதிக்கப்பட்டுள்ள ஆக அதிகமான வர்த்தக அபராதம். இது மின்னிலக்க நாணயத் துறைக்கு ஏற்பட்டுள்ள மேலும் ஒரு பின்னடைவு. மின்னிலக்க நாணயத் துறை தொடர்பாகப் பல விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பைனான்சின் முன்னாள் அதிகாரியான சிங்கப்பூரர் சேமுவல் லிம் மீதும் விதிமீறல் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்