என்டியுசியில் பிஎம்இ பிரிவினருக்கு அதிக பிரதிநிதித்துவம்

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரை உள்ளடக்கிய ‘பிஎம்இ’ பிரிவினருக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கம் முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் ஊழியர் அணியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களை தொழிற்சங்கத் தலைமைக்கு தயார்ப்படுத்தவும் அது முயற்சிகளை எடுக்கவிருக்கிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் உறுப்பினர்களின் ஊதியம், ஊழியர் நலன், வேலை வாய்ப்புகள் புத்தாக்க முறையில் அணுகப்படும். மேலும் ஒரே தொழில்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் நெருக்கமாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்படும்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைவர் இங் சீ மெங் நவம்பர் 22ஆம் தேதி இந்த மாற்றங்களை அறிவித்தார்.

பிஎம்இ மற்றும் தொழில்நுட்பர்களின் பங்கு ஏற்புடையதாக இருக்க தொழிற்சங்கங்களுக்கு இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று திரு இங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஊழியர் அணியில் பிஎம்இ பிரிவினர் அறுபது விழுக்காடு வரை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது, 1990களின் ஆரம்பக்கட்டத்தில் இருந்த 30 விழுக்காட்டிலிருந்து கூடியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிற்சங்க இயக்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிய அறிக்கையை தேசிய பேராளர்கள் மாநாட்டில் அவர் வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய பேராளர் மாநாட்டில் என்டியுசி புதிய மத்திய குழுவைத் தேர்ந்தெடுத்து அடுத்த நான்கு ஆண்டுகால பயணத்துக்கான இலக்கை நிர்ணயிக்கிறது.

என்டியுசியின் தேசிய பேராளர் மாநாடு தற்போது ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் நடைபெற்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!