பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 23.03 விழுக்காடு ஏற்றம் கண்டு $110,001லிருந்து $135,336ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் பதிவான $150,001 தொகையைவிட இது குறைவு.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் 7.99 விழுக்காடு கூடியது.
அது $125,011லிருந்து $135,002ஆக உயர்ந்துள்ளது.
பொதுப் பிரிவு மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து மற்ற அனைத்து வகை வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். ஆனால் பொதுவாக அது பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சிறிய கார்களுக்கான கட்டணம் $95,689லிருந்து $85,001ஆக குறைந்துள்ளது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் $78,001லிருந்து $73,889ஆக சரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கான கட்டணம் $10,889லிருந்து $10,001ஆகக் குறைந்துள்ளது.