வெளியுறவு அமைச்சில் ஒரு பிரிவில் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருந்த ஓர் அதிகாரி மீது அமைச்சை ஏமாற்றியதாகவும் பொதுச் சேவை ஊழியர் நிலையில் தவறான தகவல் அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான கில்பெர்ட் ஓ ஹின் குவான், 44, மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
வெளியுறவு அமைச்சின் இணையப் பக்கத்தில் அவரது பெயர் காணப்படவில்லை.
அமைச்சின் தூதரக சேவையைப் பயன்படுத்தி மூடப்பட்ட உறையில் பெனடால் மாத்திரைகளை அவர் சிங்கப்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு அனுப்பப்பட்டதை அவர் மறைத்ததாகச் சொல்லப்படுகிறது.
2022 டிசம்பர் 22ஆம் தேதி தனது சகாவான டியோன் லோக் செங் வாங்குக்குப் பதிலாக தனிப்பட்ட ஒருவருக்கு அந்த உறை அனுப்பப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சின் பெய்ஜிங் தூதரகத்தில் திரு லோக் முதல்நிலை செயலாளராகப் பணியாற்றுகிறார்.
வெளியுறவு அமைச்சிலிருந்து தூதரகம் போன்ற வெளிநாட்டு அலுவலகங்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்படும் பொருள்கள் பாதுகாக்கப்பட்டது. அதனை சுங்கத் துறை அதிகாரிகளால் திறக்கவோ கைப்பற்றவோ, தேடிப் பார்க்கவோ முடியாது.
மற்றொரு சம்பவத்தில் அமைச்சை ஏமாற்றும் விதத்தில் லோவுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு தூதரக கைப்பை சேவை மூலம் கைக்கடிகாரம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த உறை லோக்கு அனுப்பப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
திரு லோக் எடுத்துச் சென்ற கைக்கடிகாரம் தனது தந்தைக்குச் சொந்தமானது என்று அமைச்சின் துணைச் செயலாளரான ஓங் எங் சுவானிடம் அவர் பொய் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
வழக்கு விசாரணையின்போது ஓ குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் மூன்றில் இரண்டு குற்றச்சாட்டுகளை தொடரவிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திரு ஓவின் வழக்கறிஞரான விதெர்ஸ் கத்தார்வோங் சட்ட நிறுவனத்தின் ஷஷி நாதன் ஆவணங்களை சரிபார்க்கவும் தலைமைச் சட்ட அதிகாரியை சந்திக்கவும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.